Sivakarthikeyan: “அந்த தளபதி சேர் எனக்கு வேண்டாவே.. அது ரொம்ப தப்பாயிரும் தம்பிகளா?” -சிவகார்த்திகேயன்!-is sivakarthikeyan the next thalapathy vijay of tamil cinema amaran actor answers here - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: “அந்த தளபதி சேர் எனக்கு வேண்டாவே.. அது ரொம்ப தப்பாயிரும் தம்பிகளா?” -சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: “அந்த தளபதி சேர் எனக்கு வேண்டாவே.. அது ரொம்ப தப்பாயிரும் தம்பிகளா?” -சிவகார்த்திகேயன்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 30, 2024 01:26 PM IST

Sivakarthikeyan: “அவர்கள் சினிமாவை எல்லாம் பார்த்துதான் நான் சினிமாவிற்கு வந்திருக்கிறேன். அவர்கள் போன்று நான் படங்கள் செய்து, ஹிட் கொடுத்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கலாம்.” - சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: “அந்த தளபதி சேர் எனக்கு வேண்டாவே.. அது ரொம்ப தப்பாயிரும் தம்பிகளா?” -சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan: “அந்த தளபதி சேர் எனக்கு வேண்டாவே.. அது ரொம்ப தப்பாயிரும் தம்பிகளா?” -சிவகார்த்திகேயன்!

நான் அடுத்த தளபதியா?

இதன் மூலம், தானே இனி அடுத்த தளபதி என்று சிவகார்த்திகேயன் சூசகமாக சொல்வதாக பலர் சமூகவலைதளங்களில் எழுதினர். இந்த நிலையில் தனியார் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவரிடம், நீங்கள்தான் அடுத்த தளபதியா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இது குறித்து அவர் பேசும் போது, “இங்கு ஒரே தளபதிதான்; ஒரே சூப்பர் ஸ்டார் தான்; ஒரே தல தான். ஒரே உலக நாயகன் தான். அதனால், அவர்களின் அடுத்த இடத்தில் நான் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது. அவர்கள் சினிமாவை எல்லாம் பார்த்துதான் நான் சினிமாவிற்கு வந்திருக்கிறேன். அவர்கள் போன்று நான் படங்கள் செய்து, ஹிட் கொடுத்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், அவர்களாகவே மாற வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அது சரியானதும் கிடையாது. அது மிகவும் தவறான விஷயம் என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார்.

 

தற்போது சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்திய ராணுவ வீரரான முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சால்பல்லவி நடித்துள்ளார்.

 

சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன்!

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்கிற்கு வருகிறது. இந்தப்படத்தின் புரோமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில், அது தொடர்பான நிகழ்வு ஒன்றில்தான் இதனை பேசினார்.

சிவகார்த்திகேயனை ‘அமரன்’ படத்தில் நடிக்கத் தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசி இருந்தார்.

ஏன் சிவகார்த்திகேயன்?

அவர் பேசும் போது, “ முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்.” என்று பேசினார்.

அமரன் படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயேன் நடித்திருக்கிறார். அவரது மனைவியான இந்து கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.