Homemade Mysore Pak: பண்டிகைகள் வந்தாச்சு! வீட்டிலேயே மைசூர் பாக் செய்யும் ஈசி டிப்ஸ்!
Sep 30, 2024, 05:29 PM IST
Homemade Mysore Pak: இன்னும் சில தினங்களில் பல விழாக்கள் வரிசையாக வரப்போகின்றன. இந்த விழாக்களில் தேவைப்படும் பலகாரங்களை கடைகளில் வாங்குவது, மொத்தமாக வாங்கி பகிர்ந்து கொள்வது என இருப்போம். சிலர் வீடுகளிலேயே பலகாரம் செய்கின்றனர்.
மக்கள் விழாக்கள் என்றாலே பல விதமான கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். எப்போதும் உறவுகளோடு இணைந்து கொண்டாடும் மகிழ்ச்சியை விழாக்கள் கொடுக்கின்றன. இயல்பாகவே இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல விதமான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக இன்னும் சில தினங்களில் பல விழாக்கள் வரிசையாக வரப்போகின்றன. இந்த விழாக்களில் தேவைப்படும் பலகாரங்களை கடைகளில் வாங்குவது, மொத்தமாக வாங்கி பகிர்ந்து கொள்வது என இருப்போம். சிலர் வீடுகளிலேயே பலகாரம் செய்கின்றனர். இந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் அரண்மனையில் முதன் முதலாக செய்யபட்ட இனிப்பு வகை தான் மைசூர் பாக், இது இப்போது இந்தியா முழுவதும் பிரபலமான இனிப்பாக மாறி விட்டது. இந்த மைசூர் பாகை வீட்டிலேயே செய்யும் எளிமையான முறையை காண்போம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் கடலை மாவு
300 கிராம் அளவுள்ள நெய்
அரை கிலோ சர்க்கரை
ஒரு கப் தண்ணீர்
செய்முறை
முதலில் கடலை மாவை நன்கு சளித்து கட்டிகள் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி கடலை மாவை போட்டு வறுக்க வேண்டும். அதன் வாசனை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பத்ததிற்கு வந்ததும் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறி விட வேண்டும்.
நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து அதில் சர்க்கரை,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சர்க்கரை கொதித்து நுரைத்து வரும்போது நெய் கலந்து வைத்துள்ள மாவை சேர்த்து கலக்கி விடவும். கை விடாது மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.நாற்பது நிமிடங்கள் கலந்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கவும். கடைசியாக மீதமுள்ள நெய் சேர்த்து கலந்து ஓரம் ஒட்டாமல் வரும் போது இறக்கவும். உடனடியாக எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி அரை மணி நேரம் கழித்து துண்டுகள் போடவும். இப்போது மிகவும் சுவையான, வாயில் வைத்ததும் கரையக்கூடிய நெய் மைசூர் பாக் ரெடி. இதனை வீட்டில் இருக்கும் அணைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.
மைசூர் பாக்
மைசூரில் பல அரண்மனைகள் உள்ளன. இங்கு வாழ்ந்த ராஜாக்களுக்காக முதன் முதலாக இந்த மைசூர் பாக் செய்து தரப்பட்டதாக கூறப்படுகிறது. இது மைசூர் ராஜாக்களின் முக்கிய இனிப்பு பலகாரம் ஆகும். பின்னாளில் இந்த பாகு இந்தியா முழுவதும் பரவியது. மைசூரில் முதன் முதலாக செய்யப்பட்டதால் இதற்கு மைசூர் பாகு எனப்பெயர் வந்துள்ளது. இது அதிக நெய் ஊற்றி செய்யப்படுவதால் மிக்கவும் ருசியான இனிப்பு பலகாரம் ஆகும். மேலும் இது வாயில் வைத்தாலே கரையும் மென்மையான தன்மை கொண்டது. இதன் மென்மைத் தன்மையே பல இடங்களில் பிரபலம் அடைய காரணமாக இருந்து வருகிறது. இந்த செயல்முறையை பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக இந்த சுவையான மென்மையான மைசூர் பாகை செய்ய முடியும். வரும் தீபாவளிக்கு இந்த பலகாரத்தை உங்கள் வீடுகளில் செய்து பாருங்கள்.
டாபிக்ஸ்