Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.01 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.01 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.01 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Published Sep 30, 2024 02:58 PM IST

Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் செப்டம்பர் 30 எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.30 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.30 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க! (i stock)

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் நன்மைகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுப்பெறும், குடும்பத்துடன் பாசம் அதிகரிக்கும். சுப காரியங்களில் பணம் செலவழிக்கலாம். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் விளையாட்டில் சிறந்த வெற்றிகளை பெறுவார்கள். பிசினஸில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும், பிறகு எல்லாம் சரியாகிவிடும். குடும்பத்தில் ஒரு வயதான நபருக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் படிப்படியாக நிலைமை சீராகும். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதன் காரணமாக இன்று நீங்கள் சோம்பலாக இருக்கலாம். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் வெற்றிகரமானது. இருப்பினும் அவர்களும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியைப் பெறுவீர்கள். கலை ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சிறப்பாக நடைபெறும். சிலருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். உங்களின் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் நண்பர்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். மனம் சமநிலையை இழக்கக்கூடாது. 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும், உத்தியோகஸ்தர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம், மூத்தவர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னர் செயல்படவும். நீங்கள் மரியாதைக்குரிய நபர்களைச் சந்திக்கலாம் நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்துடன் வெளியில் செல்வீர்கள்.நிலம் வாங்குவதில் மிகுந்த கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலையை தொடங்கும் முன்னர் அதன் தன்மையை ஆராய்ந்து செயல்படுவது அவசியம். வியாபாரம் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.  பழைய நண்பரை சந்திக்கலாம். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் அக்கறை இருக்கும். யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும், கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சில சுப காரியங்களில் பணம் செலவழிக்கலாம். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள்போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும், ரியல் எஸ்டேட் வியாபாரம் லாபம் தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் புதிய திசையில் கவனம் செலுத்துங்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner