மிர்சா காலிப்பின் கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே!
Nov 29, 2024, 12:55 PM IST
மிர்சா காலிப்பின் கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு. கவிஞரான மிர்சா காலிப்பின் கவிதைகளில் இருந்து உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு பெயர்களை தேர்ந்தெடுங்கள். இந்தப்பெயர்கள் காலத்தால் அழியாதவை மற்றும் எப்போது சூட்டினாலும் வித்யாசமாகவும், நவீனமாகவும் இருக்கக்கூடிய பெயர்கள் இவை. மிர்சா காலிப் உருது மற்றும் பெர்சிய கவிஞர் ஆவார். இதில் கலாச்சாரத்தின் ஆழம் மற்றும் கவிதையின் வசீகரம் என அவரது பெயர்கள் அழகானதாக இருக்கும்.
ரஸா
இந்தப்பெயருக்கு திருப்தி மற்றும் மனநிறைவு ஆகிய அர்த்தங்கள் உள்ளது. இது காவியம், மனதுக்கு அமைதி, இதனம், அன்பு என எண்ணற்ற அர்த்தங்களைத்தரும்.
தன்ஸீலா
தன்ஸீலா என்ற வெளிப்படுத்துவது அல்லது அனுப்புவது என்பதைக் குறிக்கும். இந்தப்பெயர் காலிபின் கவிதையில் இடம்பெறும் பெயராகும். தெய்வீக சக்தியின் வெளிப்பாடு என்று பொருள்.
ஷப்னம்
இந்தப்பெயருக்கு காலைப்பனித்துளி என்று பொருள். இயற்கையின் இந்த அம்சத்தை காலிப் அடிக்கடி பயன்படுத்துவார். பனித்துளிப்போல், அவரது கவிதைகளில் காதல் மற்றும் காத்திருத்தலுக்கு உருவகங்களாக அவர் இந்தப்பெயரை தேர்ந்தெடுப்பார்.
மெஹர்
மெஹர் என்றால் கருணை நல்ல குணமுடையவர் என்று பொருள். இந்தப்பெயருக்கு கருணை, நற்குணம், அன்பின் ஒளி என்று பொருள்.
ஷெரா
ஷெரா என்றால் பூ அல்லது மின்னக்கூடிய என்று பொருள். இந்தப்பெயர் காலிப்பின் கவிதைகளில் அழகு, தூய்மை மற்றும் நேசிக்கக்கூடிய நபர் என்பதை பிரதிபலிக்கிறது. பூவின் மென்மையைப்போன்ற குணமுடையவர் என்பது இந்தப்பெயரின் அர்த்தம்.
சாஹர்
சாஹர் என்றால் விடியல் என்று பொருள். நம்பிக்கை மற்றும் புதுப்பிப்பு என்பதற்கு உருவகமாக தனது கவிதையில் இந்தப்பெயரை பயன்படுத்தியுள்ளார். விடியல் அல்லது இருளில் இருந்து அகல்தல் என்ற பொருளை இந்தப்பெயர் தரும்.
குல்ஷெரின்
குல் என்றால் ரோஜா, ஷெரின் என்றால் இதமான என்று பொருள். காலிப்பின் கவிதையில் ரோஜாக்கள் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அன்பு, அழகு மற்றும் பேரார்வம் என்று பொருள்.
ஜமீலா
ஜமீலா என்றால் அழகு என்று பொருள். காலிக் அழகு, உள்புற அழகு மற்றும் வெளிப்புற அழகு என இரண்டுக்கும் அந்தப்பெயரை பயன்படுத்தியுள்ளார். தங்களுக்கு அழகானவர்கள் என்பதை அவரது கவிதையில் இந்தப்பெயர் குறிக்கும்.
மிர்சா
மிர்சா என்றால் புராதான தேர்வு, இது காலிப்பின் கவிதைகளில் அரசர், பிரபுக்கள் என்பதை குறிக்க பயன்படுத்தப்படும் பெயராகும்.
ஹினா
ஹினா என்றால் ஹென்னா அதாவது மருதாணி என்பதில் இருந்து வந்த பெயர். இது அழகு மற்றும் அலங்காரம் என்பதைக் குறிக்கும். இந்தப்பெயர் உங்களுக்கு அன்பான நபரின் அழகு மற்றும் எழிலைக் குறிக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்