வெளியாகும் முன்னே பரபரப்பை ஏற்படுத்தும் எதிர்நீச்சல் 2.. நடக்கும் அடுத்தடுத்த மாற்றம்.. மக்களே ரெடியா..
Oct 12, 2024, 07:15 AM IST
எதிர்நீச்சல் 2 சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், சில முன்னணி கதாப்பாத்திரங்களில் மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நக்கல், நையாண்டி, குரூரம், ஆணாதிக்கம், குடும்பத்தில் பெண்கள் படும் துயரம், அதிலிருந்து மீண்டு எழுதல் என பல காட்சி அமைப்புகள் மூலம் தமிழ் ரசிகர்களை இழுத்த சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். ஆரம்பத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த சீரியல், நாட்கள் செல்ல செல்ல தன் கதையமைப்பினால், ரசிகர்களை தன் வசம் இழுத்தது.
ஆதி குணசேகரன்
அதிலும், ஆதி குணசேகரனாக நடித்து, வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் அப்லாஸ் வாங்கி இருப்பார் மாரி முத்து. இந்த சீரியலின் மையமே இவர்தான். இவரைச் சுற்றி நடக்கும் விஷயங்களும், இவரால் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளும் தான் கதை என்றாலும், அதில் அவர் பேசும் வசனமும் அதன் உச்சரிப்பு மற்றும் முக பாவனையும் அனைவரையும் அசரடித்தது.
பின் இவர் சோசியல் மீடியா மீம் கன்டெண்ட் ஆன பின்பு இந்த சீரியலின் மவுசு கூடியது. பிறகென்ன, மாரிமுத்து இன்று என்ன சொல்லி நம்மை ரசிக்க வைக்கப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் மக்கள் சன் டிவி பக்கம் சென்றுவிடுவர். இந்த நாடகம் பீக்கில் சென்றுகொண்டிருந்த சமயத்திலேயே, அதுவும் இந்தச் சீரியலின் டப்பிங் வேலைகள் சென்று கொண்டிருக்கும் சமயத்திலேயே இவர் உயிரிழந்தார்.
சரிந்த டிஆர்பி
இது, எதிர்நீச்சல் சீரியலுக்கும் பெருத்த அடியை கொடுத்தது. முன்னதாக, மாரிமுத்து இந்த சீரியல் குறித்து பேசுகையில், டைரக்டர் இன்னும் 5 வருடங்களுக்கு எடுக்கும் அளவு இந்த சீரியலின் ஸ்கிரிப்டை வைத்துள்ளார். அந்தக் கதைகளிலும் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினார். ஆனால், விதி அமையவில்லை.
இவரின் இழப்பு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடும்பமாக இருந்தது. இவரது சின்னச் சின்ன உச்சரிப்புகளைக் கண்டு ரசிக்கத் தொடங்கிய இளைஞர்கள் முதல், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்க ஆரம்பித்த பெண்கள் வரை இவரின் இழப்பு பலரையும் பாரமாக்கியது.
மாறிய கதை
இந்த நிலையில் தான், மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அளவு திறமை யாருக்கு இருக்கிறது என்ற கேள்வியுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் தான். ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை மாரிமுத்துவின் நெருங்கிய நண்பரான வேல ராமமூர்த்தி ஏற்று நடித்தார். ஆனால், அவரின் அனைத்து முயற்சிகளும் வீண். மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கொடுத்த அந்த அழுத்தமும், வசீகரமும் வேல ராமமூர்த்தியிடம் மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், சன் டிவி சீரியலில் உச்சத்தில் இருந்த எதிர்நீச்சல் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, ரியலுக்கு பெரும் பின்னடைவும் ஏற்பட்டது. புதிதாக வந்த நடிகருக்காக சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனதால் சீரியலின் டி. ஆர். பியில் கடும் அடி விழுந்தது.
முடிவுக்கு வந்த சீரியல்
இதையடுத்து, கடந்த ஜூன் மாதத்துடன் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் தான் சன் தொலைக்காட்சி சீரியலின் நேரத்தை மாற்ற சொன்னதாகவும் அதை இயக்குநர் ஏற்க மறுத்த காரணத்தினால் தான் சீரியல் முடிவுக்கு கொண்டு வரபட்டதாகவும் சொல்லப்பட்டது.
எதிர்நீச்சல்
இந்நிலையில் எதிர்நீச்சல் 2 சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் முன்னணி பாத்திரத்தில் ஜனனியாக நடித்த மதுமிதா நடிக்க போவது இல்லை என்று அறிவித்து உள்ளார்.
மதுமிதா கொடுத்த பெரிய ஷாக்
இது தொடர்பாக அவர் வெளியீட்டு இருக்கும் அறிவிப்பில் , “ ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. எனது அன்பான ரசிகர்களுக்கு, இதயம் நிறைந்த நன்றியுடன், சில காரணங்களால் நான் இனி எதிர்நீச்சல் பகுதி 2 இன் பாகமாக இருக்க மாட்டேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பயணம் முழுவதும் நீங்கள் என் மீது பொழிந்த அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவிற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
உங்கள் அசைக்க முடியாத ஊக்கம் எனக்கு உலகத்தை உணர்த்தியது, மேலும் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்த அனைத்து நினைவுகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் ஒரு அற்புதமான புதிய வாய்ப்பில் அடியெடுத்து வைக்கும் போது, எதிர்காலத்திலும் நீங்கள் அதே அன்பையும், ஆதரவையும் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன் எனக் கூறி ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார் மதுமிதா.
இனி இவரும் இல்லை
இந்த நிலையில் தான், தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்த மற்றொருவரும் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியரில் பிரிதர்ஷினி ஜோடியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தவர் தாரா. தன்னுடைய தைரியமான் மற்றும் துடுக்கான கேள்விகளால் நம்மை ஈர்த்தவர் இவர்.
ஆனால், தற்போது தயாராகிவரும் எதிர்நீச்சல் 2 சீரியலில் இவர் இல்லை. இவரது கதாப்பாத்திரம் மாற்றப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே சீரியலில் நடந்த ஒரு மாற்றத்தால் மக்களிடம் வரவேற்பு குறைந்து டிஆர்பி குறைந்து சரிவை சந்தித்த சீரியலின் அடுத்த பாகத்திலும் இவ்வளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
திருச்செல்வம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்த கோலங்கள் நாடகத்தின் இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய சீரியல் தான் எதிர்நீச்சல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், தற்போது எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் உருவாக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
டாபிக்ஸ்