Ethirneechal: ‘ஆம்பளையவா கை நீட்டி அடிக்கிற’.. ஈஸ்வரி கன்னத்தில் கை வைத்த ஆதி குணசேகரன்.. - அதிர்ந்து போன அப்பத்தா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: ‘ஆம்பளையவா கை நீட்டி அடிக்கிற’.. ஈஸ்வரி கன்னத்தில் கை வைத்த ஆதி குணசேகரன்.. - அதிர்ந்து போன அப்பத்தா!

Ethirneechal: ‘ஆம்பளையவா கை நீட்டி அடிக்கிற’.. ஈஸ்வரி கன்னத்தில் கை வைத்த ஆதி குணசேகரன்.. - அதிர்ந்து போன அப்பத்தா!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 07, 2023 01:04 PM IST

எதிர்நீச்சல் சீரியலின் எபிசோடிற்கான புரமோ வெளியாகி இருக்கிறது.

கலவரம் செய்த ஆதிகுணசேகரன்!
கலவரம் செய்த ஆதிகுணசேகரன்!

அவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அந்தக் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேலராம மூர்த்தி நடிக்க இருப்பதாக கூறி, அவருக்கான மாஸ் புரமோவும் வெளியிடப்பட்டது.

 

இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் முதன்முறையாக எதிர்நீச்சல் சீரியலில் நுழைந்தார். நுழைந்த உடனேயே ஆதி குணசேகரனாக மாறிய வேலராமமூர்த்தி அவருக்கே உரித்தான பாணியில் கலவரம் செய்தார்.

இந்த நிலையில் இன்று ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் புரமோ வெளியாகி இருக்கிறது. அதில், நந்தினியிடம் நீ இங்கே இருந்து கொண்டே வெளியே சென்று சாப்பாடு வியாபாரம் பார்க்கிறாயாமே என்று கேட்க, வழக்கம் போல நந்தினி, திமிராக அபபடியென்றால் வெளியே சென்று பார்க்கலாமா? என்று கேட்க, குணசேகரன் ஏய்.. என்று மிரட்டினார்.

இதனையடுத்து ஈஸ்வரியிடம் வந்த குணசேகரன் ஒரு ஆம்பளைய எப்படி நீ கை நீட்டி அடிப்பாய் என்று கேட்க, என்னுடைய சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள அடித்தேன் என்று அவர் சொன்னதுதான் மிச்சம், பளார் என்று ஈஸ்வரி கன்னத்தில் ஆதி அறைந்தார். இதைப்பார்த்த அப்பத்தா உள்ளிடோர் பதறிப்போக, கதிர் கைத்தட்டி சிரிக்கிறார். இத்தோடு இந்த புரமோ முடிகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.