Ethirneechal 2: எதிர்நீச்சல் ரசிகர்களே.. ரெடியா இருக்கீங்களா.. வருகிறது பகுதி 2 - ஆனால் இனி அவர் இல்லை!-ethirneechal 2 serial to begin soon but madhumitha is not doing in lead role - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal 2: எதிர்நீச்சல் ரசிகர்களே.. ரெடியா இருக்கீங்களா.. வருகிறது பகுதி 2 - ஆனால் இனி அவர் இல்லை!

Ethirneechal 2: எதிர்நீச்சல் ரசிகர்களே.. ரெடியா இருக்கீங்களா.. வருகிறது பகுதி 2 - ஆனால் இனி அவர் இல்லை!

Aarthi Balaji HT Tamil
Oct 02, 2024 02:22 PM IST

Ethirneechal 2: எதிர்நீச்சல் 2 சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் முன்னணி பாத்திரத்தில் ஜனனியாக நடித்த மதுமிதா நடிக்க போவது இல்லை என்று அறிவித்து உள்ளார்.

Ethirneechal 2: எதிர்நீச்சல் ரசிகர்களே.. ரெடியா இருக்கீங்களா.. வருகிறது  பகுதி 2 - ஆனால் இனி அவர் இல்லை!
Ethirneechal 2: எதிர்நீச்சல் ரசிகர்களே.. ரெடியா இருக்கீங்களா.. வருகிறது பகுதி 2 - ஆனால் இனி அவர் இல்லை!

பகல் சீரியல்களை விட இரவு சீரியல்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுவார்கள்.

குணசேகரன் இறப்பு

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

டி. ஆர். பியில் கடும் அடி

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டி. ஆர். பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது. இதனால் கடந்த ஜூன் மாதத்துடன் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் சன் தொலைக்காட்சி நேரத்தை மாற்ற சொன்னதாகவும் அதை இயக்குநர் ஏற்க மறுத்த காரணத்தினால் தான் சீரியல் முடிவுக்கு கொண்டு வரபட்டது என சொல்லப்பட்டது.

எதிர்நீச்சல் 2

இந்நிலையில் எதிர்நீச்சல் 2 சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் முன்னணி பாத்திரத்தில் ஜனனியாக நடித்த மதுமிதா நடிக்க போவது இல்லை என்று அறிவித்து உள்ளார்.

மதுமிதா கொடுத்த பெரிய ஷாக்

இது தொடர்பாக அவர் வெளியீட்டு இருக்கும் அறிவிப்பில் , “ ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. எனது அன்பான ரசிகர்களுக்கு, இதயம் நிறைந்த நன்றியுடன், சில காரணங்களால் நான் இனி எதிர்நீச்சல் பகுதி 2 இன் பாகமாக இருக்க மாட்டேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பயணம் முழுவதும் நீங்கள் என் மீது பொழிந்த அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவிற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். 

உங்கள் அசைக்க முடியாத ஊக்கம் எனக்கு உலகத்தை உணர்த்தியது, மேலும் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்த அனைத்து நினைவுகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் ஒரு அற்புதமான புதிய வாய்ப்பில் அடியெடுத்து வைக்கும் போது, ​​எதிர்காலத்திலும் நீங்கள் அதே அன்பையும், ஆதரவையும் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

என் பக்கத்தில் இருப்பதற்கு நன்றி, மேலும் பல சாகசங்கள் இதோ!மிகுந்த அன்பும் நன்றியும், எப்போதும் " எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மதுமிதாவின் பயணம்

மதுமிதாவின் கேரியர் ஷானி என்ற கன்னட சீரியலில் தொடங்கி , புத்தமல்லி மூலம் மேலும் நிலைபெற்றது. தமிழில் பிரியாத வரம் வேண்டும் மற்றும் எதிர்நீச்சல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.