ஆதிரையின் திருமணத்தை நிறுத்த துடிக்கும் சித்தி.. பந்தக்காலை தூக்கி எறிந்து அலப்பறை.. மருமகள் சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆதிரையின் திருமணத்தை நிறுத்த துடிக்கும் சித்தி.. பந்தக்காலை தூக்கி எறிந்து அலப்பறை.. மருமகள் சீரியல் அப்டேட்

ஆதிரையின் திருமணத்தை நிறுத்த துடிக்கும் சித்தி.. பந்தக்காலை தூக்கி எறிந்து அலப்பறை.. மருமகள் சீரியல் அப்டேட்

Marimuthu M HT Tamil
Oct 07, 2024 02:45 PM IST

Marumagal Serial: ஆதிரையின் திருமணத்தை நிறுத்த துடிக்கும் சித்தி.. பந்தக்காலை தூக்கி எறிந்து அலப்பறை.. மருமகள் சீரியல் அப்டேட் குறித்துக் காண்போம்.

Marumagal Serial:  ஆதிரையின் திருமணத்தை நிறுத்த துடிக்கும் சித்தி.. பந்தக்காலை தூக்கி எறிந்து அலப்பறை.. மருமகள் சீரியல் அப்டேட்
Marumagal Serial: ஆதிரையின் திருமணத்தை நிறுத்த துடிக்கும் சித்தி.. பந்தக்காலை தூக்கி எறிந்து அலப்பறை.. மருமகள் சீரியல் அப்டேட்

இன்றைய புரோமோ:

மருமகள் சீரியலில் இன்றைய புரோமோவில் ஆதிரையின் சித்தி, வேல்விழி மற்றும் ஏகாம்பரம் குடும்பத்தினர் ஆதிரையின் திருமணப் பந்தக்கால் நிகழ்ச்சிக்கு வருவதைப் பார்த்து பிரச்னையைக் கிளப்ப நினைக்கிறார். அதேபோல், அவர்கள் அருகில் வந்ததும் ‘இப்போதே இந்த விழாவில் இருந்து போய் ஆகணும்’’ என்கிறார், ஆதிரையின் சித்தி. இதனை பிரபு, ஆதிரையிடம் நாசூக்காக எடுத்துச் சொல்கிறான். மேலும் ஆதிரையின் சித்தி, ஏகாம்பரத்தின் குடும்பத்தினர் இந்த பந்தக்கால் நடும் விழாவில் இருந்தால், நாங்கள் பந்தக்கால் நடமாட்டாம் என கையில் அடித்து உணர்ச்சி பொங்க சத்தியம் செய்கிறார். இதில் கடுப்பான, ஆதிரையின் அப்பா சிவப்பிரகாசம், ஆதிரையின் சித்தியை விழாவை விட்டு வெளியில் போகச்சொல்லி கோபத்தில் கத்துகிறார். உடனே விறுவிறுவென சென்ற ஆதிரையின் சித்தி, பந்தக்கால் மரத்தை பிடித்து கீழே தள்ளிவிடுகிறார். இந்நிலையில் இன்று என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பில் மருமகள் சீரியலின் புரோமோ முடிகிறது.

முந்தைய எபிசோட்:

ஆதிரையும் பிரபுவும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட நிலையில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கான பத்திரிகை செலக்‌ஷன் செய்ய கடைக்குச் சென்றிருக்கின்றனர். அதில் ஆதிரையின் அப்பா சிவப்பிரகாசம், மற்றும் ஆதிரையின் சித்தி இருக்கிறார். பிரபுவுடன் அவரது தந்தை தில்லையும், பிரபுவின் நண்பன் சாமியும் இருக்கின்றனர்.

அப்போது ஆதிரை தன் அப்பா விருப்பப்பட்ட கார்டை வாங்கச் சொல்கிறார். இதனால் டென்ஷன் ஆகிறான், பிரபு. ஆனால் அதனை வெளிக்காட்டவில்லை. தனது தந்தையிடம் செலவு அதிகரிப்பதை பிரபு, தனியாக அழைத்து, கோபமாக எடுத்துச் சொல்கிறான்

இதனை புரிந்துகொண்ட ஆதிரையின் சித்தி, எப்படியாவது பிரச்னையை உருவாக்கி கல்யாணத்தை நிறுத்த திட்டமிடுகிறாள். அப்போது வேல்விழியும் அந்த கடைக்கு வருகிறார்.

அப்போது தில்லை பிரபுவின் அருகில் வரும் ஆதிரை என்ன பிரச்னை என்று கேட்கிறார். அப்போது அப்பா கார்டு கொஞ்சம் குறைவான விலையில் பார்க்கலாம் என சொன்னதாக, தனது தந்தையை மாட்டிவிடுகிறான்.

வேல்விழியின் என்ட்ரி:

இதை தூரத்தில் இருந்து பார்க்கும் வேல்விழி, பிரபுவை வம்பிழுக்கிறாள். அப்போது, ஆதிரையிடம் பிரபு நம்பர் ஒன் கஞ்சன் என்று போட்டுவிடுகிறாள்.

அப்போது உடனே தலையிட்டுப்பேசிய பிரபு, ’என் மாமா ஆசைப்பட்டபடி திருமணம் நடக்கணும், கார்டு விலை பற்றி என் அப்பா தான் சொன்னார்’ எனப்பொய் கூறுகிறான். அவரும் மகனைக் காப்பாற்ற அந்த பொய்யை அப்படியே யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார்.

பின் மாமா சொன்ன கார்டுக்கு ஆர்டர் கொடுத்திடு என்று தன் ஏ.டி.எம் கார்டை தன் நண்பன் சாமியிடம் கொடுத்துவிடுகிறான். பின், ஆதிரை இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தமுடியாது என்று வேல்விழியிடம் சவாலாகப் பேசிவிட்டுச் செல்கிறாள்.

இதை தூரத்தில் இருந்து பார்க்கும் ஆதிரையின் சித்தி, வேல்விழியுடன் நட்பாகி, கல்யாணத்தை நிறுத்த முனைகிறார். இருவரும் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொள்கின்றனர். வேல்விழியும் ஆதிரையின் சித்தியின் உள்குத்தினை புரிந்துகொண்டு நட்பாக நினைக்கின்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.