Marimuthu: ‘நாங்க அழவே இல்ல.. அவர் ஆடைகளை தானம் பண்ணப் போறோம்’ மாரிமுத்து மகள் நெகிழ்ச்சி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marimuthu: ‘நாங்க அழவே இல்ல.. அவர் ஆடைகளை தானம் பண்ணப் போறோம்’ மாரிமுத்து மகள் நெகிழ்ச்சி!

Marimuthu: ‘நாங்க அழவே இல்ல.. அவர் ஆடைகளை தானம் பண்ணப் போறோம்’ மாரிமுத்து மகள் நெகிழ்ச்சி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 30, 2023 01:08 PM IST

RIP Marimuthu: ‘அப்பா இறந்துவிட்டார் என்று தெரிந்து, மருத்துவமனை போய் பார்த்ததுமே, என்ன பண்றது என்றே தெரியவில்லை. அழுகை வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை’

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மகள் பேட்டி
மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மகள் பேட்டி

‘‘அப்பா எங்கள் விசயத்தில் ரொம்ப தலையிட மாட்டார். எங்க மீது தவறு இருந்தால் கூட எங்களுடன் தான் இருப்பார். என்ன நடந்தாலும் தைரியமா இருக்க வேண்டும் என்பார். எந்த வேலையாக இருந்தாலும், நாம செய்ய வேண்டும் என்று கூறுவார். கார் துடைப்பதை கூட அவர் தான் எனக்கு கற்றுத்தந்தார். 

அப்பாவோட இறுதி சடங்கு முடிந்து கார் பயங்கர அழுக்கா இருந்தது. அதை துடைக்கும் போது தான், ‘அந்த இடத்தில் அழுக்கு இருக்கும், இந்த இடத்தில் அழுக்கு இருக்கும்’ என்று அவர் கூறியது நியாபகத்திற்கு வந்தது. அவர் சொன்ன இடத்தில் அழுக்கு இருந்தது. 

அவருடைய அறை அப்படியே தான் இருக்கு. அவருடைய பரிசுகள் எல்லாத்தையும் அவருடைய அறையில் வைத்து விட்டோம். அவருடைய ஆடைகள் இருக்கிறது. 30 நாள் கழித்து ஏதாவது ஆசிரமத்திற்கு கொடுக்கலாம் என நினைத்திருக்கிறோம். 

எல்லாரும் சொல்வது, ‘ஒரு நாளாவது, அந்த வீட்டில் அப்பா இருந்திருக்கலாம்’ என்று தான் சொல்கிறார்கள். அதன் பின், அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களுடைய மனகஷ்டத்தை நம்மிடம் சொல்கிறார்கள். நமக்கு அதை கேட்பதில் கஷ்டம் இருந்தாலும், அதை கேட்க வேண்டிய கடமை இருக்கிறது. 

அப்பாவோட இறுதி சடங்கு முடிந்து இரண்டு நாள் இருக்கும், அப்பா மொபைலுக்கு ஒரு போன் வந்தது. அண்ணா தான் எடுத்தான். ஒரு 15 வயதி பெண் பேசினார். நிறைய தைரியம் கொடுத்து பேசிய அந்த பெண், சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்தார். யாருனே தெரியாத ஒருவர் போன் செய்து, சாப்பிட்டீர்களா என்று கேட்கிறாரே என்று நினைத்து சந்தோசப்பட வேண்டியது தான். அப்பா அவ்வளவு பேர் சம்பாதித்து வைத்து சென்றிருக்கிறார். 

அப்பா இறந்துவிட்டார் என்று தெரிந்து, மருத்துவமனை போய் பார்த்ததுமே, என்ன பண்றது என்றே தெரியவில்லை. அழுகை வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அதற்கு பிறகு, ப்ரேக்கிங் பாய்ண்ட் இருந்தது. ‘என்ன பண்றது..’ என்று தோன்றியது. அதுக்கு பிறகு தோன்றியது, ‘அம்மாவை பார்த்துகனும், அண்ணாவை பார்த்துக்கனும்’ என்று தான் தோன்றியது. அவன் ரொம்ப எமோஷனல். 

நாங்க உடைந்து அழுவதை அப்பா விரும்பமாட்டார். அதனால் எந்த நிலையிலும் அழ கூடாது என்று தோன்றியது. இவ்வளவு தானா வாழ்க்கை? சரி ஓகே, அப்படி போக வேண்டியது தான். உடைந்து உட்கார்ந்தால் பேரே இல்லாமல் போய்விடும். மாரிமுத்து பொண்ணு, பையன் அப்படிங்கிற மாதிரி விசயம் பண்ணனும்,’’
என்று அந்த பேட்டியில் மாரிமுத்துவின் மகள் கூறியிருந்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.