Ethirneechal: இரண்டாவது திருமணம் செய்யும் ஆதி குணசேகரன்..திடுக் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் மலையாள ரீமேக்
Ethirneechal Malayalam: எதிர்நீச்சல் மலையாள ரீமேக் காணல்பூவு என்ற பெயரில் ஒளிபரப்பாகி கேரளாவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரமான ஆதி குணசேகரன் இரண்டாவது திருமணம் செய்ய திடு திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது.
சமீபத்தில் முடிவடைந்த தமிழ் டிவி சீரியல்களில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியலாக எதிர்நீச்சல் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இதில் இடம்பிடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரமும் அதில் நடித்த மறைந்த இயக்குநர், நடிகரான ஜி. மாரிமுத்துவும் தான். அவர் மறைவுக்கு பின்னர் இந்த கதாபாத்திரத்தில் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி நடித்திருந்தார். இவரும் தனது ஸ்டைலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
எதிர்நீச்சல் மலையாள ரீமேக்
தமிழில் சூப்பர் ஹிட்டடித்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது மலையாளத்தில் காணல் பூவு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மலையாளத்தில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த சீரியல் கடந்த 2022 முதல் சூர்யா டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது. சன்டிவியில் ஒளிபரப்பான தமிழ் செல்வி, பிரியமான தோழி போன்ற சீரியல்களில் நாயகியாக நடித்த சாண்ட்ரா பாபு கானல்பூவு சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது திருமணம்
எதிர்நீச்சல் கதையில் வரும் குணசேகரன் கதாபாத்திரம், பெண்களுக்கு எதிராக தனது ஆளுமையை செலுத்தும் விதமாக அமைந்திருக்கும். அவருக்கு எதிராக வீட்டு பெண்கள் தங்களது சுயமரியாதையை இழக்காமல் போராடுவதே திரைக்கதையாக அமைந்திருக்கிறது.
ஆனால் மலையாளத்தில் இதற்கு முற்றிலும் எதிராக குணசேகரன் கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக பொண்களை அடிமைப்படுத்து காட்சிகள் சில மாற்றப்பட்டிருக்கும் நிலையில், குணசேகரன் இரண்டாவது திருமணம் போல் காட்சிகள் வெளிவந்துள்ளன.
கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் ஆதி குணசேகரன் இரண்டாவது திருமணம் செய்து வந்து நிற்க, ஈஸ்வரி உள்பட வீட்டில் உள்ள அனைவரும் ஷாக் ஆகி நிற்கிறார்கள். தற்போது இந்த திருப்பத்துடன் மலையாள எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருகிறது.
எதிர்நீச்சல் 2
தமிழில் சில காரணங்களால் அவசரமாக எதிர்நீச்சல் சீரியல் முடிக்கப்பட்டது. ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரன் - ஜனனி இடையிலான மோதலுடன் பரபரப்பாகவே சென்றுகொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகமாக எதிர்நீச்சல் 2 தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. திருச்செல்வம் உதவியாளர் இந்த தொடரை இயக்க இருப்பதாகவும், நடிகை தேவையானியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலாக, எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா, இரண்டாம் பாகத்தில் நடிக்கபோவதில்லை என தெரிவித்துள்ளார்.
மதுமிதா விலகல் பின்னணி
இது தொடர்பாக மதுமிதா தனது இன்ஸ்டாவில் வெளியீட்டிருக்கும் அறிவிப்பில், "ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. எனது அன்பான ரசிகர்களுக்கு, இதயம் நிறைந்த நன்றியுடன், சில காரணங்களால் நான் இனி எதிர்நீச்சல் பகுதி 2 இன் பாகமாக இருக்க மாட்டேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த பயணம் முழுவதும் நீங்கள் என் மீது பொழிந்த அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் அசைக்க முடியாத ஊக்கம் எனக்கு உலகத்தை உணர்த்தியது, மேலும் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்த அனைத்து நினைவுகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
நான் ஒரு அற்புதமான புதிய வாய்ப்பில் அடியெடுத்து வைக்கும் போது, எதிர்காலத்திலும் நீங்கள் அதே அன்பையும், ஆதரவையும் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.