Ethirneechal Serial: அவசரமாக எடுத்த முடிவு.. எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கான காரணத்தை சொன்ன பாம்பே ஞானம்
Ethirneechal Serial: எதிர்நீச்சல் தொடரில் பட்டம்மாள் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த பாம்பே ஞானம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேட்டியளித்திருக்கிறார். அதில் எதிர்நீச்சல் தொடர் முடிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறினார்.
Ethirneechal Serial: வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சீரியல் தான். அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.
பகல் சீரியல்களை விட இரவு சீரியல்
அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.
குணசேகரன் இறப்பு
அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.
ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டி. ஆர். பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.
முடிவுக்கு வந்த எதிர்நீச்சல்
யாரும் எதிர்பார்க்காத விதமாக எதிர்நீச்சல் சீரியலில் ஜூன் 7 பெரும் திருப்பம் ஏற்பட்டது. கொலை செய்ய்ப்பட்டார் என வழக்கு தொடுத்த நிலையில், உயிருடன் சாட்சி சொல்ல வந்தார் அப்பத்தா. இதை யாருமே எதிர்பார்கவே இல்லை. நேரில் ஆஜரான அவர், குணசேகரன் தனக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதையும், வெடிகுண்டு வைத்து அதை மறைக்க முயன்ற விஷயத்தை ஆதாரத்துடன் நிரூபித்தார். இதனால் அதிகபட்சமாக குணசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கொடுத்தார்.
தண்டனை கிடைத்தும் குணசேகரன் பாத்திரம் திருந்தாமல் இருப்பது போன்று சீரியல் முடிக்கப்பட்டது. திடீரென சீரியலை முடிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அதனால் பலரும் தங்களுக்கு தோன்றும் ஒவ்வொரு கதையை சொல்லி வருகிறார்கள்.
எதிர்நீச்சல் தொடரில் பட்டம்மாள் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த பாம்பே ஞானம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேட்டியளித்திருக்கிறார். அதில் எதிர்நீச்சல் தொடர் முடிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறினார்.
” எதிர்நீச்சல் தொடரில் நடிக்க வந்த வேல ராமமூர்த்தி மீது ஆரம்பத்தில் விமர்சனம் எழுந்தது. ஆனால் மக்கள் அவரை நாட்கள் செல்ல செல்ல ஏற்றுக்கொண்டார்கள்.
மாரிமுத்து மரணத்திற்கு பிறகு கதையில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களால், சீரியலின் டிஆர்பி குறைந்து போனது. இதனால், சேனலில் இருந்து சீரியலை வேரு நேரத்திற்கு மாற்றும்படி பேசியிருக்கிறார்கள்.
ஆனால் இயக்குநர் அதை விரும்பவில்லை. முக்கிய முடிவெடுத்த இயக்குநர், சீரியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தார் “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்