தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரி..அஸ்வின் கிடையாது! இரண்டு அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா

வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரி..அஸ்வின் கிடையாது! இரண்டு அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா

Nov 22, 2024, 08:12 AM IST

google News
வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாக கருதப்படும் பெர்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டார் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இரண்டு அறிமுக வீரர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாக கருதப்படும் பெர்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டார் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இரண்டு அறிமுக வீரர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாக கருதப்படும் பெர்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டார் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இரண்டு அறிமுக வீரர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியான பெர்த் மைதானத்தில் வைத்து இன்று தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்கு முக்கியமான டெஸ்ட் தொடராக இது அமைந்துள்ளது.

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆன இந்தியா, தற்போது வலுவான கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த தொடரில் களமிறங்குகிறது.

இந்தியா பேட்டிங்

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். "பிட்ச் பார்க்கையில் சிறப்பானதாக தெரிகிரது. நான்கு அனுபவம் வாய்ந்த பேட்டர்கள் அணியில் உள்ளார்கள். 2018ஆம் ஆண்டில் இந்த மைதானத்தில் டெஸ்ட் விளையாடியுள்ளோம். எனவே இங்கு என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெரியும். முதல் செஷனில் பிட்ச் விரைவாக செய்படும்" என்று டாஸுக்கு பின் பும்ரா கூறினார்.

"சரி சமமாக 50க்கு 50 போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். எந்த வகையான போட்டியாக இருந்தாலும் கடுமையாக போராடுவோம். டெஸ்ட் போட்டிகளில் அது சற்று அதிகமாகவே இருக்கும்" என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறினார்.

ரோஹித், அஸ்வின் கிடையாது

கடந்த வாரம் குழந்தைக்கு அப்பாவாகியிருக்கும் ரோஹித் ஷர்மா இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அதேபோல் காயம் காரணமாக ஓபனர் சுப்மன் கில்லும் இந்த போட்டியை மிஸ் செய்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா என இரண்டு அறிமுக வீரர்கள் களமிறங்குகிறார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் மற்றொரு ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெர்த் மைதானத்தில் இதுவரை

இதுவரை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 107 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 32, ஆஸ்திரேலியா 45 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. 29 போட்டிகள் டிராவில் முடிவடைந்திருக்கும் நிலையில், ஒரு போட்டி டை ஆகியுள்ளது.

பெர்த் மைதானத்தில் இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 1, ஆஸ்திரேலியா 4 முறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இந்த மைதானத்தில் 2018இல் மோதிக்கொண்ட போட்டியில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் விவரம்

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்

ஆஸ்திரேலியா: நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை