பவுலிங்கில் கலக்கிய ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் ஜோடி! இந்திய டாப் ஆர்டரின் மற்றொரு சொதப்பல்
பவுலிங்கில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் கூட்டணி திணறடித்தனர். அப்படியே எதிர்வினையாக நியூசிலாந்து பவுலர்களிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை தாரை வார்த்து கொடுத்தனர்.
இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றியிருக்கும் நியூசிலாந்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட்டாகியுள்ள நிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸில் திணறி வருகிறது.
ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் ஜோடி கலக்கல்
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்து வீச்சில் திணறியது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினார்கள்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் 235 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இந்திய பவுலர்களில் ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டிரைக் பவுலரான அஸ்வின் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை
இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியாவின் டாப் ஆர்டர் நியூசிலாந்து பவுலர்களின் துல்லிய பந்து வீச்சுக்கு இரையாகின. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளன. சுப்மன் கில் 31, ரிஷப் பண்ட் 1 ரன் எடுத்திருக்கும் நிலையில் களத்தில் உள்ளார்கள்.
டாபிக்ஸ்