Jasprit Bumrah: “ரொம்ப தூரம் போகனும், இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன்!”ஓய்வு குறித்து மனம் திறந்த ஜஸ்ப்ரீத் பும்ரா
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், இந்திய அணியின் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார்.

ஓய்வு குறித்து மனம் திறந்த ஜஸ்ப்ரீத் பும்ரா (BCCI-X)
கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பையை இறுதிப்போட்டியில் தென் ஆப்பரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இரண்டாவது முறையாக டி20 உலக சாம்பியன் ஆனது.
இந்தியா வெற்றி பெற்று பின்னர் அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்தபோது, ஸ்டார் பேட்ஸ்மேனான விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அவரை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்கள்.
அடுத்தடுத்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு ஷாக்காக அமைந்தாலும், இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக அவர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு பலரும் தங்களது மதிப்பையும் அளித்தனர்.
