தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pat Cummins: ஹாட்ரிக் வீழ்த்திய பேட் கம்மின்ஸ்! முதல் கேப்டனாக தனித்துவ சாதனை - புதிய மைல்கல் எட்டிய ஸ்டார்க்

Pat Cummins: ஹாட்ரிக் வீழ்த்திய பேட் கம்மின்ஸ்! முதல் கேப்டனாக தனித்துவ சாதனை - புதிய மைல்கல் எட்டிய ஸ்டார்க்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 21, 2024 05:10 PM IST

இரண்டு ஓவர்களில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகள் தூக்கி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் ஆஸ்திரேலியா வீரராக தனித்துவ சாதனை புரிந்துள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

Australia's Pat Cummins bowls during the ICC Men's T20 World Cup cricket match between Australia and Bangladesh
Australia's Pat Cummins bowls during the ICC Men's T20 World Cup cricket match between Australia and Bangladesh (PTI)

ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீக்கு பிறகு டி20 உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியா அணியின் தற்போதைய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் பெற்றார். 

ஆஸ்திரேலியா வெற்றி 

நடந்து வரும் டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா. 

நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 140 ரன்கள் எடுத்து.

இதையடுத்து சேஸிங் செய்த ஆஸ்திரேலியா 11.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. 

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து மழை பெய்த நிலையில் டிஎல்எஸ் முறைப்படி இந்த ஓவரில் 73 ரன்கள் ஆஸ்திரேலியா அணி எடுத்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் 

முன்னதாக முதல் இன்னிங்ஸில், இரண்டு ஓவர்களில் அடுத்தடுத்த பந்துகளில் முகமதுல்லா, மெஹிதி ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தூக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஆஸ்திரேலியா கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை 2024 எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் விக்கெட்டாக இது அமைந்தது. 

கம்மின்ஸ் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்ததினார். 

அத்துடன், ஒட்டுமொத்தமாக, டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஏழாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். 

டி20 போட்டிகளில் பிரட் லீ, ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ் ஆகியோருக்கு அடுத்தடுத்தபடியாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது ஆஸ்திரேலியராக உள்ளார். 

அத்துடன் ஒரு கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற தனித்துவ சாதனையும் புரிந்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை தொடரில் வீழ்த்தப்பட்ட ஹாட்ரிக் விக்கெட்டுகள்

பிரெட் லீ (ஆஸ்திரேலியா) vs வங்கதேசம், கேப்டவுன், 2007

கர்டிஸ் காம்பர்(அயர்லாந்து) vs நெதர்லாந்து, அபுதாபி, 2021

வனிந்து ஹசரங்கா (இலங்கை) vs தென்னாப்பிரிக்கா, ஷார்ஜா, 2021 

காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா) vs இங்கிலாந்து, ஷார்ஜா, 2021

கார்த்திக் மெய்யப்பன் (UAE) vs இலங்கை, ஜீலாங், 2022

ஜோஸ் லிட்டில் (அயர்லாந்து) vs நியூசிலாந்து, அடிலெய்டு, 2022

பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) vs வங்கதேசம், ஆன்டிகுவா, 2024

டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்

பிரட் லீ  vs  வங்கதேசம், கேப்டவுன், 2007

ஆஷ்டன் அகர் vs தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க், 2020

நாதன் எல்லிஸ் vs வங்கதேசம், மிர்பூர், 2021

பேட் கம்மின்ஸ் vs வங்கதேசம், ஆன்டிகுவா, 2024

 

மலிங்கா சாதனையை முறியடித்த ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரில் தன்சித் ஹசனை வீழ்த்திய பின், தனது 95 வது உலகக் கோப்பை விக்கெட்டுடன் வெள்ளை பந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் ஆனார்.

இதன்மூலம் மலிங்காவின் சாதனையை முறியடித்து முன்னேறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.