தமிழ் செய்திகள்  /  Astrology  /  Tirumala Brahmotsavam 2022 Third Day: Malaiyappar Swamy In Simha Vahanam

Tirumala brahmotsavam: மூன்றாம் நாள் நிகழ்வு: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி

Sep 29, 2022, 01:06 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோத்சவத்தின் மூன்றாவது நாளான இன்று சிம்ம வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோத்சவத்தின் மூன்றாவது நாளான இன்று சிம்ம வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோத்சவத்தின் மூன்றாவது நாளான இன்று சிம்ம வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான கோயில் பிரம்மோத்சவ நிகழ்வு கடந்த 27ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் கோலாலமாக தொடங்கியது. ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் மூன்றாவது நாளான இன்று மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் உலா வந்தார்.

சமீபத்திய புகைப்படம்

Uthirattathi Nakshatram: ‘கேட்டதை கொடுக்கும் காமதேனுவின் அருள் பெற்றவர்கள்!’ உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!

Apr 29, 2024 05:58 PM

Today Rasi Palan : ‘நினைத்தது நடக்கும்.. நிதானம் தேவை’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Apr 29, 2024 04:30 AM

Elarai Sani 2024: ‘ஏழரை சனி முடிஞ்சாலும் ஏன் இப்படி?’ … தள்ளாடும் தனுசு! - குரு காப்பாற்றுவாரா?

Apr 28, 2024 08:12 PM

Sadhayam Nakshatram: ‘எதிரிகளை ஓட விடுவார்கள்!’ ராஜராஜன் பிறந்த சதயம் நட்சத்திரத்தின் பலன்கள்!

Apr 28, 2024 05:29 PM

மேஷத்தில் சுழற்றிவிடும் சுக்கிரன்.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் குளிப்பது உறுதி

Apr 28, 2024 05:10 PM

குரு அஸ்தமனத்தில் பலசாலியாக மாறும் ராசிகள்.. குரு பலத்தால் உச்சத்தில் அமர போகும் ராசிகள் இவர்கள்தான்

Apr 28, 2024 05:05 PM

திருமலை திருப்பதியில் பிரமோத்சவத்தை முன்னிட்டு கோயிலில் இருந்த புறப்பட்ட உற்சவரான மலையப்ப சுவாமி, வாகன மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அவருக்கு, திருவாபரண சமர்ப்பணம், தூப, தீப, நெய் வேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டது.

இதைத்தொடரந்து கோயில் வீதிகளில் ஏழுமலையானின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்களை முழக்கமிட்டனர்.

மாடவீதிகளில் இருபுறமும் கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்பித்து சுவாமியை வணங்கினர். இந்த ஊர்வலத்தின்போது கலந்து கொண்ட ஜீயர்கள் மற்றும் ஜீயர்களின் சீடர்கள் திவ்ய பிரபந்த கானம் வேத பண்டிதர்களின் வேத கோஷம் ஆகியவை ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் செவிகளுக்கு இனிமை ஊட்டுவதாக அமைந்திருந்தன.

டாபிக்ஸ்