தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dc Vs Kkr: ஸ்கெட்ச் போட்டு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபாரம்

DC vs KKR: ஸ்கெட்ச் போட்டு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபாரம்

Marimuthu M HT Tamil
Apr 30, 2024 12:36 AM IST

DC vs KKR: டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ஷாட் ஆடும் காட்சி
இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ஷாட் ஆடும் காட்சி (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பேட்டிங்கை கையில் எடுத்தது.

அதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பிரிதிவி ஷா மற்றும் ஜேக் ஃப்ரெஸர் முகுர்க் ஆகிய இருவரும் 13 மற்றும் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய அபிஷேக் பரேலும், ஷாய் ஹோப்பும் 18 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐந்தாவதாக களமிறங்கிய ரிஷப் பந்த், 20 பந்துகளுக்கு 27 ரன்கள் எடுத்திருக்கும்போது வருணின் பந்தில், எஸ்.எஸ். ஐயர் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஆறாவதாக களமிறங்கிய அக்ஸர் படேல், நரைனின் பந்தில் 15 ரன்கள் எடுத்தபோது போல்டானார். பின், 7ஆவதாக களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வருணின் பந்தில் 4 ரன்களுக்கும், 8ஆவதாக இறங்கிய குமார் குஷக்ரா 1 ரன் எடுத்தபோது, வருணின் பந்திலும் அவுட்டானார்.

9ஆவதாக களமிறங்கிய குல்தீப் யாதவ் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்னான 35 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து இறங்கிய ரஷிக் சலாம் 8 ரன்கள் எடுத்தபோது, ஹர்ஷித் ரானாவின் பந்தில் அவுட்டானார். இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 153 ரன்களை எடுத்தது. இதில் 13 ரன்கள் உதிரியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கிடைத்தது. 

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

154 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொடக்கவீரரான பில் சால்ட் 33 பந்துகளுக்கு, 68 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தைத் தந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 68 ரன்கள் எடுத்தபோது, பட்டேலின் பந்தில் அவுட்டானார். சுனில் நரைன் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

ரிங்கு சிங்கு, 11 ரன்கள் எடுத்தபோது வில்லியம்ஸின் பந்தில் அவுட்டானார். இதன்பின், நான்காவதாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று ஆடி, இறுதிவரை ஆட்டமிழக்காமல், 33 ரன்களை எடுத்தார். அதில் 23 பந்துகள் பிடித்து மூன்று சிக்ஸர்களும் அடக்கம். மறுமுனையில் அவருடைய பார்ட்னரான வெங்கடேஷ் ஐயர் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, 16.3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி மொத்தமாக,வெற்றி இலக்கான 154 ரன்களைத் தாண்டி, 157 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 பந்துகள் எஞ்சிருக்கும் நிலையில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 157 ரன்களை எடுத்து அபாரவெற்றிபெற்றது. இதில் கொல்கத்தா அணிக்கு உதிரியாக 4 ரன்கள் கிடைத்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சார்பில் அக்ஸர் பட்டேல் வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். மேலும்,லிஸாட் வில்லியம்ஸ் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

 

IPL_Entry_Point