Baiveetu Biriyani Masala : பாய்வீட்டு பிரியாணி மசாலாப்பொடி! சைவம் மற்றும் அசைவ பிரியாணிகள் செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Baiveetu Biriyani Masala : பாய்வீட்டு பிரியாணி மசாலாப்பொடி! சைவம் மற்றும் அசைவ பிரியாணிகள் செய்யலாம்!

Baiveetu Biriyani Masala : பாய்வீட்டு பிரியாணி மசாலாப்பொடி! சைவம் மற்றும் அசைவ பிரியாணிகள் செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Apr 09, 2024 01:27 PM IST

Baiveetu Chicken Biriyani : ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் இந்த பிரியாணி மசாலா சேர்த்து செய்யுங்கள். இதை அதிகளவில் தயாரித்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்துங்கள்.

Baiveetu Biriyani Masala : பாய்வீட்டு பிரியாணி மசாலாப்பொடி! சைவம் மற்றும் அசைவ பிரியாணிகள் செய்யலாம்!
Baiveetu Biriyani Masala : பாய்வீட்டு பிரியாணி மசாலாப்பொடி! சைவம் மற்றும் அசைவ பிரியாணிகள் செய்யலாம்!

ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் இந்த பிரியாணி மசாலா சேர்த்து செய்யுங்கள். இதை அதிகளவில் தயாரித்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்துங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப்பொருட்களையும் வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்

சிலோன் பட்டை – 25 கிராம்

கிராம்பு – 10 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

ஸ்டார் சோம்பு – 10 கிராம்

ஜாவித்திரி – 5 கிராம்

பிரியாணி இலை – 5

வரமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 10 கிராம்

செய்முறை

அனைத்தையும் கடாயை சூடாக்கி, அனைத்து பொருட்களையும் சேர்த்து கருகிவிடாமல் வறுத்து எடுக்க வேண்டும். இதை வறுக்க வேண்டிய தேவைகூட இல்லை. ஆனால் வறுத்தால் நீண்ட நாட்கள் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.

வறுத்த பொருட்களை ஆறவைத்து மிக்ஸிஜாரில் சேர்த்து நல்ல பொடியாக பொடித்துக்கொள்ள வேண்டும்.

இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளலாம். இதை வைத்து சிக்கன், மட்டன், பீஃப், இறால், காளான் என அனைத்து வகை பிரியாணிகள், நூடுல்ஸ் மற்றும் தாளிச்ச உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்க்க சுவை அள்ளும்.

இதைப்பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சிக்கன் – ஒன்றரை கிலோ

பாஸ்மதி அரிசி - 2 கப்

பட்டை – 1

கிராம்பு – 4

ஏலக்காய் - 1

அன்னாசிப்பூ – 1

பிரியாணி இலை - 1

சோம்பு – ஒரு ஸ்பூன்

எலுமிச்சைபழச்சாறு – ஒரு பழம்

வெங்காயம் – 10 மெல்லியதாக நறுக்கியது

தக்காளி - 8 நறுக்கியது (சிறியது)

இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 நறுக்கியது

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை – 2 கொதுது

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடியளவு

செய்முறை -

சிக்கனில் எலுமிச்சை பழசாறு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் கலந்து 30 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வதக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்து கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மூடி வைத்து 3 நிமிடம் வேகவிடவேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள இந்தப்பொடியை சேர்க்க வேண்டும். பின்னர் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து மூடி வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவேண்டும்.

(இந்த சிக்கனை பொரித்தும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது வேகவைத்தும் எடுத்துக்கொள்ளலாம்)

நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்துகலந்து இறக்கி வைக்கவேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து பொரிய விடவேண்டும்.

அடுத்து தண்ணீர், உப்பு சேர்த்து தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து மூடி வேகவிடவேண்டும்.

கடைசியாக நெய் ஊற்றி தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், வறுத்த முந்திரி பருப்பு அதின் மேல் வேகவைத்த சாதத்தை வைத்து அழுத்தி அதை ஒரு தட்டில் கவிழ்த்து பிறகு சிறிதளவு சிக்கன் மசாலாவை வைத்து சூடாக பரிமாறவேண்டும்.

சிக்கன் பிரியாணி தயார். சுடச்சுட பரிமாறினால் சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா மட்டுமே போதும். தேவைப்பட்டால் எந்த கிரேவியும் செய்துகொள்ளலாம்.ந்த பிரியாணியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.