தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ml Vs Lsg Innings Break: பூரான் அதிரடி, கேஎல் ராகுல் நிதானம்..! மும்பை இந்தியன்ஸ் அணியில் எட்டு வீரர்கள் பவுலிங்

Ml vs LSG Innings Break: பூரான் அதிரடி, கேஎல் ராகுல் நிதானம்..! மும்பை இந்தியன்ஸ் அணியில் எட்டு வீரர்கள் பவுலிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 17, 2024 09:39 PM IST

Ml vs LSG Innings Break: நிக்கோலஸ் பூரான் அதிரடி, கேஎல் ராகுல் நிதானம் கலந்த ஆட்டத்தை லக்னோ அணி 214 ரன்கள் குவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் எட்டு வீரர்கள் பவுலிங் செய்த நிலையில், ஸ்பின்னர் ப்யூஷ் சாவ்லா மற்றும் நுவன் துஷாரா ஆகியோர் மட்டும் முழுவதுமாக தங்களது 4 ஓவர்களை வீசினர்.

கேஎல் ராகுல் நிதானம், மும்பை இந்தியன்ஸ் அணியில் எட்டு வீரர்கள் பவுலிங்
கேஎல் ராகுல் நிதானம், மும்பை இந்தியன்ஸ் அணியில் எட்டு வீரர்கள் பவுலிங் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் 13 போட்டிகளில் 4 வெற்றி, 8 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 போட்டிகளில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளை பெற்று 7வது இடத்தில் இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் மோதலில் லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் டிவால்ட் பிரீவிஸ், அர்ஜுன் டென்டுல்கர், ரோமரியோ ஷெப்பர்டு, நுவன் துஷாரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தேவ்தத் படிக்கல், மேட் ஹென்றி, மோக்சின் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சீசனில் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் அர்ஜுன் டென்டுல்கர்.

மும்பை பவுலிங்

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 75, கேஎல் ராகுல் 55, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 28, ஆயஷ் பதோன் 22 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் ப்யூஷ் சாவ்லா, நுவன் துஷாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

படிக்கல் சொதப்பல், கேஎல் ராகுல் நிதானம்

இந்த சீசன் முழுக்க சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தேவ்தத் படிக்கல் பார்ம் இல்லாமல் தவித்து வந்தார். இந்த சீசனில் கடைசி போட்டியில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியிலும் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

மற்றொரு ஓபனரும், அணியின் கேப்டனுமான கேஎல் ராகுல் நிதானமாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் மூன்றாவது பேட்ஸ்மேனாக மார்கஸ் ஸ்டோனிஸ் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். 28 ரன்கள் அடித்த ஸ்டோனிஸ் அவுட்டானபோதிலும், நிலைத்து நின்று பேட் செய்த கேஎல் ராகுல் அரைசதமடித்தார். இதற்கிடையே தீபக் ஹூடா 11 ரன்களில் வெளியேறினார்.

41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது இன்னிங்ஸில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்தார்.

நிக்கோலஸ் பூரான் அதிரடி

பேட்டிங் செய்ய களமிறங்கிய முதலே அதிரடி மோடில் இருந்த நிக்கோலஸ் பூரான், மும்பை பவுலர்களின் பந்து வீச்சை தெறிக்கவிட்டார். சிக்ஸர்களாக பறக்க விட்ட அவர் அதிவேக அரைசதமடித்தார். அர்ஜுன் டென்டுல்கர் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 19 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

29 பந்துகளில் 75 ரன்கள் அடித்து அவுட்டானார் பூரான். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்களை அடித்தார்.

மும்பை அணியின் எட்டு வீரர்கள் பந்து வீச்சு

விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிவால்ட் ப்ரீவிஸ் ஆகியோரை தவிர மும்பை இந்தியன்ஸ் அணியில் 8 வீரர்கள் பவுலிங் செய்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜுன் டென்டுல்கர் 2.2 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தவில்லை. முதல் 2 ஓவரில் 10 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த அவர், அடுத்த 2 பந்துகளில் 2 சிக்ஸர்களை விட்ட நிலையில், தசைபிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

அர்ஜுன் டென்டுல்கர் ஓவரின் எஞ்சிய 4 பந்துகளை நமன் தகிர் பந்து வீசி முடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024