Egg Pepper Curry : முட்டை - மிளகு மசாலா; மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் செய்வது எப்படி?
Egg Pepper Curry : முட்டைமிளகு மசாலா; மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
முட்டை – 6
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது – இடித்தது அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – 2 நறுக்கியது
உப்பு – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மல்லித்துதூள் – ஒன்றரை ஸ்பூன்
மிளகு தூள் – 3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடியளவு
செய்முறை -
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்து 2 நிமிடம் வதக்கவேண்டும்.
மிளகு தூள் சேர்த்து கலந்துவிட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவேண்டும்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவேண்டும்.
பின் அடித்த முட்டையை கடாயில் ஊற்றி அடுப்பை அதிக தீயில் வைத்து வேகவிடவும்.
பின்னர் நன்றாக கலந்துவிடவேண்டும். முட்டை பாதி வெந்ததும், அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவேண்டும்.
கடைசியாக சிறிதளவு மிளகு தூள் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவேண்டும்.
முட்டை மிளகு மசாலா தயார்!
இதை சாதம், டிபஃன் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
முட்டையின் நன்மைகள்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
2 முட்டையில் 82 சதவீதம் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 50 சதவீதம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. 25 சதவீதம் வைட்டமின் பி2 சத்துக்கள் உள்ளது. 40 சதவீதம் உங்கள் செலினியத் தேவையை பூர்த்தி செய்கிறது.
முட்டையில் வைட்டமின் ஏ, இ, பி5, பி12, இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சசத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சரிவிகித ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.
முட்டையில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது
முட்டையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான முக்கிய சத்து என்றால் அது புரதம் தான் அதுதான் உடலை நன்றாக கட்டமைக்க உதவுகிறது. உடல் வலிமை மற்றும் திசுக்கம் மற்றும் தசைகளை சரிசெய்கிறது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரதச்சத்து உள்ளது.
முட்டையில் முக்கிய அமினோஅமிலங்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தசைகளை நன்றாக பராமரிக்கவும், அதன் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது
உடலில் அதிக அடர்த்திகொண்ட லிப்போபுரதச்சத்துக்கள் என்று அழைக்கப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
உடலில் குறைவான அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின் என்ற கெட்ட கொழுப்பு நமது இதயத்தின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை கொடுக்கிறது. எண்ணெயில் பொரித்த உணவுகள், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
முட்டையில் வைட்டமின் டி சத்து உள்ளது
முட்டையின் மஞ்சள் கருவில் இயற்கையிலே வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 2 முட்டை எடுத்துக்கொண்டாலே உங்கள் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான 82 சதவீத வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் டி உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கிறது. வைட்டமின் டி ஆரோக்கியமான பற்கள் மற்றும் எழும்புகளை உருவாக்க உதவுகிறது. வைட்டமின் டி உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
முட்டை வயிறை நிரப்பும் அதனால், எடை பராமரிப்பில் உதவுகிறது
முட்டையில் கலோரிகள் குறைவு, புரதம் அதிகம் உள்ளதால், எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதை சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. பசியை குறைக்கிறது.
முட்டை உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துகிறது. சாப்பிட்டபின் திருப்தியான உணர்வை கொடுக்கிறது.
கோலீன்கள் கொண்டது
கல்லீரலில் சுரக்கும் கோலீன்கள், உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து. சிலருக்கு ஒரு நாளைக்கு தேவையான கோலீன்கள் கிடைக்காது. பி வைட்டமின்களைப்போல், கோலீன், வழக்கமாக செல்கள் இயங்குவதற்கு உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு நினைவாற்றல் திறன் வளரவும், பெரியவர்களுக்கு நினைவாற்றல் இழப்பை குறைக்கவும் கோலீன்கள் உதவுகின்றன.
ஒமேகா -3 நிறைந்தது
ஒமேகா – 3 சிறப்பான பாலிஅன்சாச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் ஆகும். இது முக்கிய கொழுப்பு குடும்பத்தை சேர்ந்தது. செல் மெம்மரைன்கள் இயங்கள் இது உதவுகிறது. இது இதயம், மூளை ஆரோக்கியம், கண் பார்வை குறைபாடு ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது. உங்கள் உடல் குறிப்பிட்ட அளவு ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது. எனவே அவற்றை நாம் வெளியில் இருந்து அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முட்டையில் இயற்கையிலே ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. இரண்டு முட்டையில் 180 கிராம் இந்த சத்து உள்ளது. எண்ணெய் நிறைந்த மீனில், ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. மீன் பிடிக்காதவர்களுக்கு முட்டை நல்ல தேர்வு.
கண்களுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
முட்டையில் வைட்டமின் ஏ மற்றும் இ, செலினிய சத்துகள் நிறைந்துள்ளது. இது கண்கள் ஆரோக்கியம் மற்றும் ரெட்டினாவின் இயக்கத்துக்கு உதவுகிறது. வயோதிகத்தால் ஏற்படும் பார்வையிழப்பை தடுக்கிறது.
இதில் லியூடின், செக்ஸாத்தின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சில கண் கோளாறுகளை சரிசெய்கின்றன. கண் புரை நோய் ஏற்படாமல் தடுக்கின்றன.
முட்டை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அத்துடன் மன ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
மன ஆரோக்கியத்தை பராமரிக்கவும் முட்டைகள் உதவுகின்றன. இதில் உள்ள வைட்டமின் பி, பி12, கோலீன், இரும்புச்சத்து மற்றும் டிரிப்டோஃபான்கள், பதற்றத்தை குறைக்க உதவுகிறது. இது மனஅழுத்த அறிகுறைகளைப்போக்கி, தூக்கத்தை அதிகரிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்