தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Fennel Water Know What Magic Happens In The Body By Drinking Fennel Water

Benefits of Fennel Water : சோம்பு தண்ணீரை பருகுவதால், உடலில் நிகழும் மாயங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Mar 25, 2024 04:56 PM IST

Benefits of Fennel Water : சோம்பு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Benefits of Fennel Water : சோம்பு தண்ணீரை பருகுவதால், உடலில் நிகழும் மாயங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்!
Benefits of Fennel Water : சோம்பு தண்ணீரை பருகுவதால், உடலில் நிகழும் மாயங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

செரிமானத்துக்கு உதவுகிறது.

சோம்பு குடிநீர் பருகுவது உடல் இயற்கை முறையில் உணவை செரிக்க வைக்க உதவுகிறது. வயிறில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதை சரிசெய்யவும் உதவுகிறது. அதன் மூலம் செரிமானத்தை ஏற்படுத்துகிறது. இதில் உள்ள வாயு நீக்கி பண்புகள், சாப்பிட்ட பின் ஏற்படும் வயிறு நிறைந்த உணர்வைக் குறைக்க உதவுகறிது. உங்களை இலகுவாக்கி, உங்கள் சவுகர்யமான உணர்வை தரும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

கலோரிகள் குறைவான இந்த தண்ணீர் உங்களுக்கு பசி உணர்வை கட்டுப்படுத்தி, சாப்பிடவேண்டும் என தோன்றும் உணர்வை குறைத்து, நீங்கள் அடிக்கடி சாப்பிடவிடாமல் தடுக்கிறது. எனவே உங்கள் எடை குறைப்பு பயணத்துக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இதில் உள்ள சிறுநீரிறக்கி குணங்கள் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தண்ணீரை தக்கவைக்கிறது. உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் எடையை விரைந்து குறைக்க வழிவகை செய்கிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இந்த பானம், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை பலப்படுத்துகிறது. தொற்றுகளையும், நோய்களையும் எதிர்த்து போராடுகிறது. இதை உணவில் எடுத்துக்கொள்வதை வழக்கமாகக்கொண்டால், அது உங்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவற்றை குணப்படுத்துகிறது. உங்களை ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் வைக்கிறது.

கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

வைட்டமின் ஏ நிறைந்தது. இது கண்கள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வயது தொடர்பான கண் பிரச்னைகளை குணப்படுத்துகிறது. இதை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொள்வது உங்களை உற்சாகத்துடன் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் கண் ஆரோக்கியத்த அதிகரிக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

இன்சூலீன் உற்பத்தியை முறைப்படுத்தும் உட்பொருட்கள் நிறைந்தது. சோம்பில் உள்ள குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு நோய் வராமல் தடுக்கிறது. எனவே சோம்பு கலந்த நீரை நீங்கள் பருகுவதால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. உங்கள் உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

மாதவிடாய் அறிகுறிகளை போக்குகிறது

சோம்பு தண்ணீரில் மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. மாதவிடாயின்போது ஏற்படும் வலியை போக்கி, உடலை ஆற்றுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிஸ்பாஸ்மோடிக் உட்பொருட்கள், கருப்பை தசைகளை ரிலாக்ஸ் செய்து, வலி நிறைந்த மாதவிடாய், அதனால் ஏற்படும் வயிறு உப்புசம் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. எனவே சிறிது சோம்பு தண்ணீரை பருகினால், மாதவிடாய் பிரச்னைகளில் இருந்து இயற்கை முறையில் விடுபடலாம்.

சுவாச புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது

இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணங்கள், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை அழித்து, சுவாசத்தை மேம்படுத்துகிறது. வாயில் துர்நாற்றம் இல்லாமல், உங்கள் தன்னம்பிக்கை மேம்பட உதவுகிறது. எங்கும், எப்போதும், சோம்பு குடிநீரை குடித்து துர்நாற்றம் இல்லாத சுவாசத்தை பெற்றிடுங்கள்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குஷங்கள், உங்கள் உடலில் செல்களை அழிக்கும் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. முகப்பரு, இளம் வயதிலே வயதான தோற்றம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. உங்கள் அழகை மேம்படுத்த சோம்பு குடிநீரை தினமும் பருகுங்கள். அது உங்கள் சருமம் பொலிவுபெறவும் உதவும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்