தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunities : நீர்வள ஆதாரத் துறை, வன விலங்கு நிறுவனத்தில் என்ன வேலை? – விவரங்கள் உள்ளே!

Job Opportunities : நீர்வள ஆதாரத் துறை, வன விலங்கு நிறுவனத்தில் என்ன வேலை? – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil

Jun 03, 2023, 08:00 AM IST

Job Opportunities : டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Job Opportunities : டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Job Opportunities : டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: வெயிலுக்கு குட்டி பிரேக்..தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

காலியிடம் - நீர்வள ஆதார துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 11, மைனிங் துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 29 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி – ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ஹைட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்சி. முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு - 01.07.2023 அடிப்படையில் பொதுபிரிவினர் 18 முதல் 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

தேர்ச்சிமுறை - எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழியில் செய்ய வேண்டும்.

கட்டணம் - பதிவுக்கட்டணம்

தேர்வுக்கட்டணம் ரூ.150, பட்டியலின பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 23.06.2023

விவரங்களுக்கு – www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் தொடர்புகொள்ள வேண்டும்.

வனவிலங்கு நிறுவனத்தில் பணி

டேராடூனில் உள்ள வனவிலங்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் - எம்டிஎஸ் 4, அசிஸ்டென்ட் கிரேடு III 4, டெக்னீசியன் 4, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1, உதவி இயக்குநர் 1 சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 1 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி - டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு பி.எஸ்சி., உதவி இயக்குநர் பணிக்கு எம்.ஏ., ஆங்கிலம் / ஹிந்தி, மற்ற பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழியில் செய்ய வேண்டும்.

வயது வரம்பு - 30.06.2023 அடிப்படையில் டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 18 – 28, மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. பட்டியலின பிரிவினருக்கு ரூ.200

கடைசிநாள்: 30.06.2023

விவரங்களுக்கு – www.wii.gov.in என்ற இணைய முகவரியில் தொடர்புகொள்ள வேண்டும்.

டாபிக்ஸ்