தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘பொறுப்பு வேண்டாமா?’ டில்லி பாஜக பிரமுகருக்கு மதுரை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

‘பொறுப்பு வேண்டாமா?’ டில்லி பாஜக பிரமுகருக்கு மதுரை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

Mar 17, 2023, 01:03 PM IST

Madurai HighCourt: இவர் ஒரு வழக்கறிஞர் ஏன் இது போன்ற வீடியவை பர்வேட் செய்ய வேண்டும்? இதன் தீவிர தன்மை தெரியாதா?
Madurai HighCourt: இவர் ஒரு வழக்கறிஞர் ஏன் இது போன்ற வீடியவை பர்வேட் செய்ய வேண்டும்? இதன் தீவிர தன்மை தெரியாதா?

Madurai HighCourt: இவர் ஒரு வழக்கறிஞர் ஏன் இது போன்ற வீடியவை பர்வேட் செய்ய வேண்டும்? இதன் தீவிர தன்மை தெரியாதா?

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டில்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் கோரிய மனு தொடர்பான விசாரணையில், நீதிபதி சரமாறி கேள்விகளை எழுப்பினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

டெல்லியைச் சேர்ந்த பாஜக கட்சி பிரமுகர் வழக்கறிஞர் பிரசாந்த் குமார் உம்ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

இவர் டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்றாம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபார்வேர்ட் செய்திருந்தார். மேலும் பிஹார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என பதிவேற்றம் செய்திருந்தார்.

‘‘இந்த வீடியோ குறித்து என் மீது தூத்துக்குடி போலிஸ்சார் வழக்கு பதிந்து உள்ளனர். இந்த வீடியோ நான் தயாரித்தது இல்லை, வந்த தகவலை மீண்டும் ஃபார்வேர்ட் செய்துள்ளேன். இதில் எந்த உட்கருத்தும் இல்லை.  தான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும்,’’ என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விசாரணையின் போது, அரசு தரப்பில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.  மேலும் அவர் வாதிடுகையில், 

‘‘அமைதியாக உள்ள தமிழகத்தில் திட்டமிட்டு இரு மாநில தொழிலாளர்களுக்கு இடையில் பிரச்சனையை உருவாக்கும் விதமாக இவர் டுவிட் செய்துள்ளார். இது இவரின் முதல் ட்விட் கிடையாது. இதுபோன்று பல சட்ட விரோதமான பொய்யான தகவல்களை ட்விட் செய்து உள்ளார். 

இவ்வாறு இவர் வீடியோ வெளியிட்டதால் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் உருவானது. ஆனால் தமிழ்நாடு அரசு உடனடியாக வடமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க டீம் அமைக்கபட்டு அமைதி உருவாக்கப்பட்டது.

இதே போல் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்தது ஆய்வு செய்தது. தமிழகத்தின் முதலமைச்சர் நேரில் சென்று வட மாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்.

மேலும் உதவி நம்பர் help line number அறிவிக்கப்பட்டது. அதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள், பாதுகாப்பு கோரி பயந்து போன தொழிலாளர்கள் பலர் போன் செய்தனர்.

இவ்வாறு விரைந்து செயல்பட்டதால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது,’’ என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரர் வழக்கறிஞரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். 

‘‘இவர் ஒரு வழக்கறிஞர் ஏன் இது போன்ற வீடியவை பர்வேட் செய்ய வேண்டும்? இதன் தீவிர தன்மை தெரியாதா? எவ்வளவு பிரச்சனை இதனால் ஏற்படுகிறது என தெரியாதா? அவர் எங்கு வேண்டுமானாலும்  இருக்கட்டும், அவருக்கு சமுக பொறுப்பு இல்லையா? ஒவ்வொரு நபருக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும்,’’ என கூறிய நீதிபதி, வழக்கின் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

டாபிக்ஸ்