தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது நடவடிக்கை கூடாது - உயர்நீதமன்றம் உத்தரவு

MHC: ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது நடவடிக்கை கூடாது - உயர்நீதமன்றம் உத்தரவு

Mar 14, 2023, 09:16 PM IST

சிபிசிஐடி போலீசார் பதில் அளிக்குமாறு அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக ஆன்லைன் ரம்மி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அந்த நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிசிஐடி போலீசார் பதில் அளிக்குமாறு அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக ஆன்லைன் ரம்மி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அந்த நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிசிஐடி போலீசார் பதில் அளிக்குமாறு அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக ஆன்லைன் ரம்மி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அந்த நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்ட செயல்படும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், " ஆன்லைனில் ரம்மி விளையாடியவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார், கடந்த 2ஆம் தேதி 26 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என தங்களது நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

அந்த கேள்விகளில், ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்த மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து நிலையில் எப்படி உயிரிழந்தார்? அவர் உயிரழக்கும்போது அவரது வங்கி கணக்கு நிலை என்ன? ஆன்லைன் நிறுவனம் சார்பில் ஏதேனும் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டதா? ஆன்லைன் விளையாட்டின் மூலம் பெற்ற வருமானத்தில் வரி எவ்வளவு கழிக்கப்பட்டது? அவர் யாருடன் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டார்? அவர்களின் பான் எண், ஆதார் விவரங்கள் என்ன?. 2016 முதல் ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்துக்கான வருமானம் எவ்வளவு?, உரிய அனுமதி பெற்றுதான் இந்த இவை நடத்தப்படுகிறதா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

உயிரிழந்த மணிகண்டன் கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு விளையாடாத நிலையில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டதுடன் காவல்துறை தனது அதிகார வரம்பை மீறி வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தனிநபரின் திறமை மற்றும் சட்டத்துக்கு உட்பட்டது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இது எதிரானது.

அதனால் சிபிசிஐடி பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், சிபிசிஐடி காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டதுடன் மார்ச் 28ஆம் தேதி வரை நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

டாபிக்ஸ்