தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  First Woman Chobdar: மதுரை ஹைகோர்ட்டின் முதல் பெண் சோப்தார் லலிதா!

First woman Chobdar: மதுரை ஹைகோர்ட்டின் முதல் பெண் சோப்தார் லலிதா!

Karthikeyan S HT Tamil

Dec 05, 2022, 04:14 PM IST

மதுரை: உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை: உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை: உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்ற அரங்குக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்பாக சோப்தார் எனப்படும் உதவியாளர்கள் செல்வது வழக்கம்.

ட்ரெண்டிங் செய்திகள்

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

Weather Update: வெயிலுக்கு குட்டி பிரேக்..தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

வெள்ளை நிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை தூக்கியபடி சத்தம் கொடுத்துக் கொண்டே செல்வது இவர்களுடை பணியாகும்.

சோப்தார்கள் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என நீதிபதிகளின் அன்றாடப் பணிகளையும் செய்கின்றனர். இதுவரை ஆண்கள் மட்டுமே சோப்தார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை ஹைகோர்ட்டின் முதல் பெண் சோப்தார் லலிதா.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முதன் முதலாக பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர், உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக செயல்படுவார். மதுரையை சேர்ந்த பட்டதாரியான லலிதா, தனக்கு சோப்தார் பணி மிகவும் பெருமையாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

டாபிக்ஸ்