தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mi Vs Srh Preview: இன்றைய ஐ.பி.எல் பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்? மும்பை இந்தியன்ஸா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தா?

MI Vs SRH Preview: இன்றைய ஐ.பி.எல் பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்? மும்பை இந்தியன்ஸா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தா?

Marimuthu M HT Tamil
May 06, 2024 08:29 AM IST

MI Vs SRH Preview: ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மே 6-ம் தேதியான இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இன்றைய ஐபிஎல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மே 6 ஆம் தேதியான இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
இன்றைய ஐபிஎல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மே 6 ஆம் தேதியான இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தனது 10 போட்டிகளில், 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதிய விகிதாச்சாரம்:

மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் இதுவரை 22 ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் 12 முறையும்; சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10லும் வென்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 246 ரன்கள் ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 277 ரன்கள் ஆகும்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்த கடைசி 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றுபோட்டிகளில் வென்றுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதியன்று, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத்தின் அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார், ஹைதராபாத் ஹைதராபாத் முதல் இன்னிங்ஸில் 277/3 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருக்கும் முக்கிய வீரர்கள்:

ரோஹித் சர்மா , இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், எய்டன் மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன்.

MI vs SRH பிட்ச் அறிக்கை

மும்பை வான்கடே மைதானம், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அறியப்படுகிறது. ஆடுகளம் பொதுவாக தட்டையாகவும் துள்ளலாகவும் இருப்பதால், பேட்ஸ்மேன்கள் தங்கள் ஷாட்களை இங்கு எளிதில் அடிக்கின்றனர். 

இருப்பினும், இங்கு நடந்த கடைசிப் போட்டி வித்தியாசமாக மாறியது. பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்களை அடிக்கத் திணறினர். கொல்கத்தா அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

MI vs SRH வானிலை:

மாலையில், மும்பையில் வெப்பநிலை 29 டிகிரியை ஒட்டி இருக்கும். உண்மையான சராசரி வெப்பநிலை 35 டிகிரியாக இருக்கும். ஈரப்பதம் சுமார் 76% இருக்கும். மழைக்கு வாய்ப்பில்லை.

MI vs SRH கணிப்பு:

கூகுளின் வெற்றி நிகழ்தகவின்படி, மும்பை தனது 12ஆவது போட்டியில் ஹைதராபாத்தை வெல்ல 54% வாய்ப்பு உள்ளது. 

எவ்வாறாயினும், ஐபிஎல் 2024-ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மிகச் சிறந்த நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பாட் கம்மின்ஸின் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தும்.

IPL_Entry_Point