தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  12th Revaluation : 12ம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீடு - விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்–விவரங்கள் உள்ளே

12th Revaluation : 12ம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீடு - விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்–விவரங்கள் உள்ளே

Priyadarshini R HT Tamil

May 30, 2023, 01:28 PM IST

12th Revaluation : 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவா்கள் விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12th Revaluation : 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவா்கள் விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12th Revaluation : 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவா்கள் விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியான நிலையில் மாணவ, மாணவிகள் கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்வதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் தேர்வில் தோற்றவர்களுக்கு உடனடி சிறப்பு தேர்வுகளுக்கான வேலைகள் மற்றும் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

மாணவர்களுக்கு தங்களின் மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் அவற்றை மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய வழிகள் உள்ளது. அதுகுறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது –

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்களின் விடைத்தாள் நகலை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து மே 31 முதல் ஜூன் 3ம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல்-2: உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305, மற்ற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) ரூ.205, மறுமதிப்பீடு பாடம் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.505 கட்டணத்தை மாவட்ட அரசுத் தோவுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்