தமிழ் செய்திகள்  /  Sports  /  Sanju Samson Fined For Slow Over Rate Against Csk Match In Chepauk

Sanju Samson Fined: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிப்பு

Apr 13, 2023, 12:28 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதம் ஏற்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதம் ஏற்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதம் ஏற்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023 சீசன் 17வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த சிஎஸ்கே 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ட்ரெண்டிங் செய்திகள்

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

Paris Olympics: ‘பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க கூடைப்பந்து அணியில் இடம்பிடிப்பேன்’-முன்னணி வீராங்கனை நம்பிக்கை

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றியை பெற்றபோதிலும், குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த திங்கள் கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், பந்து வீச்சில் தாமதத்தை ஏற்படுத்தியதாக ஆர்சிபி கேப்டன் டூ ப்ளெசிஸ்க்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடப்பு சீசனில் தாமாதமாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்