Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா
Apr 27, 2024, 05:12 PM IST
ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பையில் போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்தியா நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளது. ஆண்கள், பெண்கள் அணி, கலப்பு அணி போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளன. இந்தியாவுக்காக காம்பவுண்ட் பிரிவில் சுரேகா தனிநபர் பதக்கம் வென்றுள்ளார்.
இந்திய ஆசிய விளையாட்டு,ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் தங்கம் வென்ற ஜோதி சுரேகா வெண்ணம், ஷாங்காயில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பை போட்டியிலும் தங்கத்தை வென்று சாதித்துள்ளார். இதன் மூலம் மூன்றாவது தங்க பதக்கத்தை தன் வசமாக்கியுள்ளார்.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலக கோப்பையில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதோடு பதக்கங்களையும் அள்ளி வருகின்றனர்.
இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம்
இந்திய வில்வித்தை வீரரான பிரியான்ஷ் 147-146 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் நிக் கேப்பர்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் மற்றொரு பதக்கம் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளது.
மகளிர் கூட்டு வில்வித்தையில் பதக்கம்
ஜோதி சுரேகா, அதிதி கோஸ்வாமி மற்றும் பர்னீத் ஆகியோரைக் கொண்ட இந்தியா மகளிர் கூட்டு வில்வித்தை அணி, முதல் பரிசுக்கான போட்டியில் இத்தாலியை 236-226 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தது.
ஆண்கள் அணி பதக்கம்
காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, பிரத்மேஷ் பியூஜ், பிரியான்ஷ் ஆகியோர் அடங்கிய ஆண்கள் அணி 238-231 என்ற புள்ளிகள் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.
காம்பவுண்ட் பிரிவில் ஹாட்ரிக் வெற்றியாக இந்திய கலப்பு அணி அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா ஆகியோர் எஸ்டோனியாவை 158-157, என ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்று தங்க பதக்கத்தை தன் வசமாக்கியது. இது இந்தியாவின் மூன்றாவது தங்கம் பதக்கமாகும்
காம்பவுண்ட் பிரிவில் தொடர்ந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அரையிறுதியில் தீபிகா குமாரி 120-119 என்ற புள்ளி கணக்கில் எஸ்டோனியாவின் மீரி-மரிட்டா பாஸ் என்பவரை தோல்வியடைய செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த அணி, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தென் கொரியாவின் கிம் வூஜின், லீ வூ சியோக் மற்றும் கிம் ஜெ டியோக் ஆகியோருக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடவுள்ளார்கள்.
வில்வித்தை உலகக் கோப்பை முதல் கட்டம் ஏப்ரல் 23 முதல் 28 வரை ஷாங்காயில் நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக தென் கொரியவில் மே 21 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது
உலகக் கோப்பையின் முதல் இரண்டு கட்டங்களில் செயல்திறனின் அடிப்படையில், ஜூன் 18 முதல் 23 வரை அன்டால்யாவில் நடைபெறும் மூன்றாவது கட்டத்துக்கான அணி தேர்வு செய்யப்படும். உலகக் கோப்பையின் மூன்றாவது கட்டம் இந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்