தமிழ் செய்திகள்  /  Sports  /  Ravindra Jadeja Becomes Ninth Indian With 200 T20 Wickets

Jadeja: டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா!

Manigandan K T HT Tamil

Apr 12, 2023, 10:38 PM IST

Ravindra Jadeja: இந்த ஆட்டத்தில் ஆகாஷ் சிங், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். (PTI)
Ravindra Jadeja: இந்த ஆட்டத்தில் ஆகாஷ் சிங், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Ravindra Jadeja: இந்த ஆட்டத்தில் ஆகாஷ் சிங், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ஆட்டம் மீண்டும் இன்று (ஏப்.12) நடைபெறுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

Paris Olympics: ‘பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க கூடைப்பந்து அணியில் இடம்பிடிப்பேன்’-முன்னணி வீராங்கனை நம்பிக்கை

டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங்கைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.

இந்த ஆட்டத்தில் ஆகாஷ் சிங், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மொயின் அலி 1 விக்கெட்டையும் துஷார் தேஷ் பாண்டே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஜடேஜா, தேவ்தத் படிக்கல் விக்கெட்டையும், சஞ்சு சாம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

இதில் சஞ்சு சாம்சனை போல்டு ஆக்கினார். இதன்மூலம், ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் 138 விக்கெட்டுகள் அடங்கும். டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எடுத்து 9வது இந்தியர் ஆனார் ஜடேஜா.

அவர் தொடக்க சீசனில் (2008) ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் ஆனபோது அந்த அணியில் இருந்தார்.

பிராவோவுக்கு பிறகு சிஎஸ்கே அணிக்காக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர் ஜடேஜாதான்.

ஐபிஎல்-இல் 2,000 ரன்களுக்கும் மேல் பதிவு செய்து 100 விக்கெட்டுகளையும் எடுத்த ஒரே வீரர் சிஎஸ்கேவின் ஆல்ரவுண்டர் ஜடேஜா மட்டுமே.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்து 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அதுவே அவரது கெரியர் பெஸ்ட் ஆகும். இன்றைய போட்டி தோனிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் 200வது போட்டி ஆகும். சிஎஸ்கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள் எடுத்தால் 3000 ரன்களை ஐபிஎல் கிரிக்கெட்டில் கடப்பார் 'தல' தோனி.

இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஷிம்ரன் ஹெட்மெயருக்கு இது 50 வது ஐபிஎல் போட்டி ஆகும்.

டாபிக்ஸ்