தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  The Elephant Whispers Won The Oscars

ஆஸ்கர் வென்ற சிறந்த தமிழ் ஆவண குறும்படம் ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்‘

Priyadarshini R HT Tamil

Mar 13, 2023, 08:37 AM IST

Oscar Academy Awards 2023: தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற இந்திய ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.
Oscar Academy Awards 2023: தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற இந்திய ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.

Oscar Academy Awards 2023: தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற இந்திய ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.

முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதிகள் குறித்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டார்கள். 95வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

Manipur Violence: மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: குக்கி தீவிரவாதிகள் தாக்குதல்.. 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்

Body Of Fisherman: பாகிஸ்தானில் இறந்த இந்திய மீனவரின் உடல்.. ஒரு மாதத்துக்குப் பின் தாயகம் கொண்டுவரப்படுவதாக தகவல்!

Yamuna Expressway Accident : யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் காயம்!

இந்த பிரிவில் போட்டியிட்ட மற்ற நான்கு படங்கள் ஹால்அவுட், தி மராத்தா மிட்செல் எபெஃக்ட், ஸ்ரேன்ஜர் அட் த கேட் மற்றும் ஹவ் டு யூ மெசர் ய இயர் ஆகியவை ஆகும். இந்தப்பிரிவில் பரிசுபெறும் முதல் இந்திய திரைப்படம் தி எலிபென்ட் விஸ்பர்ஸ். போட்டியில் கலந்துகொள்ளும் மூன்றாவது படம். இதற்கு முன்னதாக, தி ஹவுஸ் தட் ஆனந்தா பில்ட் மற்றும் ஏன் என்கவுன்டர் வித் பேசஸ் ஆகிய படங்கள் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் முறையே 1969 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்கருக்குள் நுழைந்தது. 

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படம், முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. அனாதை யானையான ரகுவின் கதை. இந்த யானையை பொம்மா மற்றும் பெல்லி என்ற தம்பதியினர் பராமரித்து வந்தார்கள். இந்த ஆவணபடத்தில் யானை மற்றும் தம்பதியிடையேயான உறவு மற்றும் பாசப்பிணைப்பு மட்டும் படமாக்கப்படவில்லை. சுற்றியிருந்த இயற்கைச்சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப்படம் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெட்பிளிக்சில் வெளியானது. 

இந்தாண்டு ஆஸ்கருக்கு சென்றவை குறித்த விவரங்கள் – தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்துடன், உலகளவில் வைரலான நாட்டு நாட்டு பாடலும் தேர்வானது. இப்பாடல் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் என்ற மெகாஹிட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற தலைப்பின் கீழ் போட்டியிடுகிறது. சிறந்த ஆவண திரைப்படப்பிரிவில் இயக்குனர் ஷனாக் சென்னின் ஆல் தட் பீரித்ஸ் திரைப்படம் போட்டியிடுகிறது. போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைத்து படங்களில் தொடர்புடையவர்களும் ஆஸ்கரில் கலந்துகொள்கிறார்கள். கூடுதலாக தீபிகா படுகோனே கலந்துகொள்கிறார். அவர் இந்த முறை அறிமுகம் செய்கிறார். அறிமுகம் வழங்கும் மூன்றாவது இந்திய நடிகை என்ற சிறப்பை பெறுகிறார்.  

ஆஸ்கர் நிகழ்ச்சிகளை மூன்றாவது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள டால்பி தியேட்டரில் நிகழ்ச்சி நடக்கிறது. 

டாபிக்ஸ்