தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chandigarh:முன்னாள் மத்திய அமைச்சரின் அண்ணன் மகன் மர்ம மரணம்-சண்டீகரில் பரபரப்பு

Chandigarh:முன்னாள் மத்திய அமைச்சரின் அண்ணன் மகன் மர்ம மரணம்-சண்டீகரில் பரபரப்பு

Manigandan K T HT Tamil

Mar 23, 2023, 10:33 AM IST

Chandigarh Police: முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிரின் சகோதரர் ஹரிஸ்சந்திரா ஆஹிரின் மகன் தான் மகேஷ்.
Chandigarh Police: முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிரின் சகோதரர் ஹரிஸ்சந்திரா ஆஹிரின் மகன் தான் மகேஷ்.

Chandigarh Police: முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிரின் சகோதரர் ஹரிஸ்சந்திரா ஆஹிரின் மகன் தான் மகேஷ்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிரின் உறவினர் மகேஷ் ஆஹிர் (26), அவருடைய நண்பர் ஹரிஷ் தோடே (27) ஆகியோர் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

மகாராஷ்டிராவில் சந்திரபூரில் இருவரும் வசித்து வந்தனர். கடந்த 14ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் செல்வதாக இருவரும் கூறிவிட்டு வெளியேறி இருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் உஜ்ஜைன் செல்லவில்லை. அவர்களுடைய செல்போன் எண்ணும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அதைத் தொடர்ந்து கவலை அடைந்த அவர்களின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மார்ச் 15ம் தேதி அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

கடைசியாக அவர்கள் இருவரும் செல்போன் சிக்னல் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் இருந்தது தெரியவந்தது. போலீஸாரும், குடும்பத்தினரும் ஹரித்துவார் சென்று தேடத் தொடங்கினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிரின் சகோதரர் ஹரிஸ்சந்திரா ஆஹிரின் மகன் தான் மகேஷ்.

இந்நிலையில், சண்டீகரில் மரங்கள் நிறைந்த பகுதியில் 2 இளைஞர்கள் தூக்கில் தெங்கியபடி இருப்பதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துவிட்டு அருகில் இருந்த காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற உள்ளூர் போலீஸார் அவர்களின் அடையாளம் குறித்து விசாரித்ததில், முன்னாள் மத்திய அமைச்சரின் சகோதரர் மகன் என்பது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டேராடூனில் இருந்து இருவரும் பேருந்தில் சண்டீகர் வந்ததற்கான பேருந்து பயணச்சீட்டு அவர்களின் உடையில் இருந்ததை போலீஸார் கண்டெடுத்தனர்.

அவர்கள் தூக்கிய தொங்கிய இடத்தில் மது பாட்டில்களும், கண்ணாடி டப்ளர்களும் இருந்ததையும் போலீஸார் கைப்பற்றினர்.

அவர்களின் உறவினர்கள் வந்ததும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று உள்ளூர் போலீஸார் கூறினர்.

இதுதொடர்பாக சண்டீகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.

அந்த வனப்பகுதி அருகே இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

செக்டார் 43 பகுதியில் இரண்டு பேர் கடை ஒன்றில் கயிறு வாங்குவது சில கேமிரா காட்டிகளில் பதிவாகியிருக்கிறது என்று சண்டீகர் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரின் அண்ணன் மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்