தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Covid Increase Centre Alerts States

கோவிட் பாதுகாப்பு ஒத்திகை –மருத்துவமனைகளை தயார்நிலையில் வைக்க உத்தரவு

Priyadarshini R HT Tamil

Mar 26, 2023, 06:42 AM IST

Corona Virus : எச்சரிக்கையாக இருக்க கோவிட் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Corona Virus : எச்சரிக்கையாக இருக்க கோவிட் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Corona Virus : எச்சரிக்கையாக இருக்க கோவிட் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு, மாநிலங்களை, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நடைமுறைகளின்படி, கோவிட் தொற்று பரவல் அதிகம் இருந்தால் அங்கு பரிசோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

திண்ணை பள்ளியில் கல்வி.. தமிழ் எங்கள் மூச்சு.. தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்த உ.வே.சா..!

Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

Manipur Violence: மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: குக்கி தீவிரவாதிகள் தாக்குதல்.. 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்

Body Of Fisherman: பாகிஸ்தானில் இறந்த இந்திய மீனவரின் உடல்.. ஒரு மாதத்துக்குப் பின் தாயகம் கொண்டுவரப்படுவதாக தகவல்!

மத்திய அரசு, மாநிலங்களை, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நடைமுறைகளின்படி, கோவிட் தொற்று பரவல் அதிகம் இருந்தால் அங்கு பரிசோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒரு மில்லியன் பேருக்கு 140 பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ராஜீவ் பால் ஆகியோர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அனைவரும் சீசனில் வரும் சுவாச பிரச்னைகள் மற்றும் கோவிட் தொற்று ஆகியவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 

கடந்த சில வாரங்களாக சில மாநிலங்களில் கோவிட் – 19 பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதை பரிசோதனைகள் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள அளவிற்கு போதுமானதாக இல்லை. மாநிலங்களுக்கு கொடுத்துள்ள அறிவுரைகளில் முழு விவரங்கள் உள்ளன. மாவட்டங்கள் மற்றும் வட்டங்களில் எடுக்கப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது. சில மாநிலங்கள் குறைவான பலனைத்தரக்கூடிய ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையையே அதிகம் நம்பியுள்ளன. எனவே தேவையான மற்றும் முறையான கோவிட் பரிசோதனையை செய்ய வேண்டும். அவை மாநிலம் முழுவதிலும் ஒரே அளவில் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் ஜனவரி முதல் மார்ச் வரையும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையும் சீசன் இன்புளுயன்சா வைரஸ் தொற்று இருக்கும். தற்போது ஹெச்1என்1 மற்றும் ஹெச்3என்2 ஆகிய இரண்டு வகை இன்புளுயன்சா தொற்றுகளும் உள்ளன. எனவே மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், நோய்க்கான காரணம் மற்றும் இன்புளுயன்சா காய்ச்சல் ஏற்பட்டால் அதை கவனமாக கையாளவேண்டும். கடுமையான சுவாச கோளாறுகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். 

நாட்டில் சில மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, மாநிலங்கள் சரியான நோய்தொற்றை கண்டறிவதில் கவனம் செலுத்த வேண்டும். உடனடியாக அதிக மரணங்களும், அதிகளவில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் நடக்காதது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்து கோவிட் – 19 தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை கேரளாவில் 26.4 சதவீதமும், மஹாராஷ்ட்ராவில் 21.7 சதவீதமும், குஜராத்தில் 13.9 சதவீதமும், கர்நாடகாவில் 8.6 சதவீதமும், தமிழ்நாட்டில் 6.3 சதவீமும் உள்ளது. கோவிட்டு தடுப்பூசிகளின் காரணமாக அதிக எண்ணிக்கை மருத்துவமனை அனுமதி மற்றும் இறப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகளை தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, தயார்படுத்த 2 நாளை அறிவித்துள்ளது. அது ஏப்ரல் 10 மற்றும் 11ம் தேதியாகும். அதில் முக்கிய மருந்துகளை வழங்குவது, படுக்கை மற்றும் அவசரசிகிச்சை பிரிவுகளை தயார்படுத்துவது, மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன், மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளம், தடுப்பூசிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து சோதனை நடைபெறும். இவை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

டாபிக்ஸ்