தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குளிர் காலத்தில் இந்த 7 கீரைகளை மட்டும்தான் சாப்பிடவேண்டும்; அவை எவையென பாருங்கள்!

குளிர் காலத்தில் இந்த 7 கீரைகளை மட்டும்தான் சாப்பிடவேண்டும்; அவை எவையென பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Dec 22, 2024, 10:01 AM IST

google News
குளிர் காலத்திற்கு சாப்பிட ஏற்ற கீரைகள் எவை?
குளிர் காலத்திற்கு சாப்பிட ஏற்ற கீரைகள் எவை?

குளிர் காலத்திற்கு சாப்பிட ஏற்ற கீரைகள் எவை?

குளிர் காலத்தில் நீங்கள் சில கீரைகளை மட்டும்தான் சாப்பிடவேண்டும். பொதுவாக மழை நேரத்தில் கீரை உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழை நேரத்தில் ஏற்கனவே வியாதிகள் வரிசை கட்டி வரும். சில கீரைகள் உங்கள் பல்வேறு உடல் உபாதைகளை கொண்டுவருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் எந்த கீரைகளை மட்டும் குளிர் நேரங்களில் சாப்பிடலாம் என்று பாருங்கள். குளிருக்க இதமாக சில கீரைகள் புத்துணர்ச்சி மற்றும் ஊட்டச்சத்துடன் உங்கள் உணவுக்கு சுவையையும் சில கீரைகள் கொண்டுவரும். இந்த கீரைகளில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவையெல்லாம் உங்களை இதமாக வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக குளிர் மாதங்களில் உங்களுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். நீங்கள் இந்த குளிர் மாதங்களில் சாப்பிடவேண்டிய கீரைகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பாலக் கீரை

பாலக்கீரை பசுமையான இருக்கும். இதில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, பார்வைத்திறன் மற்றும் எலும்பை வலுப்படுத்துகிறது. இதை நீங்கள் சூப்கள், சாலட்கள் பாலக் பன்னீர் ஆகியவற்றில் பயன்படுத்த முடியும்.

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரையை நீங்கள் குளிர் காலத்தில் கட்டாயம் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். அது இந்திய உணவுகளில் நீக்கமற இடம்பெற்ற ஒரு கீரையாகும். இந்த கீரை செரிமானத்தை தருகிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வெந்தயக்கீரை பராத்தாக்கள், தேப்லாக்கள் செய்து இந்தக்கீரையை உங்கள் உணவில் எளிதில் சேர்த்துக்கொள்ளலாம்.

கடுகு கீரை

காஷ்மீரின் உணவான சர்சன்டா சாக் செய்வதற்கு முக்கியமான உட்பொருளே கடுகு கீரைதான். இந்தக் கீரை தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில்தான் அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கடுகு கீரையில் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி ஆகியவை உள்ளன. இவை உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. இது உங்களின் செரிமானத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு குளிர் காலத்தில் ஏற்ற உணவாக இந்தக் கீரை உள்ளது.

சிவப்பு தண்டுக்கீரை

சிவப்பு தண்டுக்கீரையில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் உள்ளன. இதில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த கீரைகள் அனீமியாவை எதிர்த்து போராட உதவுகின்றன. எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. குளிர் காலங்களில் உங்களுக்கு இதமளிப்பதில் இந்த கீரையும் ஒன்று. இந்த கீரையை பருப்புடன் கடைந்து அல்லது வேகவைத்து சாப்பிட்டால் அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும்.

சக்ரவர்த்தி கீரை அல்லது பருப்பு கீரை

சக்ரவர்த்தி கீரை அல்லது பருப்பு கீரை என்பது இந்திய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் சூப்பர் ஃபுட் ஆகும். இதன் கழிவுநீக்க குணங்கள் மற்றும் அதிககளவிலான கால்சியச்சத்துக்க மற்றும் வைட்டமின் ஏ, சி ஆகியவை உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கின்றன. இதை நீங்கள் பருப்புடன் கடைந்து அல்லது ரைத்தாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

முள்ளங்கி கீரை

முள்ளங்கி கீரையை யாரும் பொரும்பாலும் சாப்பிட மாட்டார்கள். அதை நறுக்கிவிட்டு முள்ளங்கியை மட்டும் சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் முள்ளங்கி கீரையில் வைட்டமி சி, கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. உங்களின் நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுகிறது. இதை பராத்தாக்களாக அல்லது வேகவைத்து சாப்பிட சுவை அள்ளும்.

காலர்ட் கீரை

காலர்ட் கீரையில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் கே, ஃபோலேட்கள் அதிகம் உள்ளது. இது செரிமான ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது. இவற்றை நீங்கள் பல்வேறு வழிகளிலும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக குளிர்கால ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த கீரை சிறந்தது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி