தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆடிப்பட்டம்தான் தேடி விதைக்கவேண்டும்! குளிர்காலத்தில் விதைக்கக் கூடாது; ஏன் தெரியுமா?

ஆடிப்பட்டம்தான் தேடி விதைக்கவேண்டும்! குளிர்காலத்தில் விதைக்கக் கூடாது; ஏன் தெரியுமா?

Priyadarshini R HT Tamil

Dec 22, 2024, 07:00 AM IST

google News
பனிக்காலத்தில் ஏன் விதைக்கக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பனிக்காலத்தில் ஏன் விதைக்கக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பனிக்காலத்தில் ஏன் விதைக்கக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

குளிர் காலத்தில் நாம் விதைகளை விதைக்கக் கூடாது. ஏன் என்று தெரியுமா? குளிர் கால தாவங்கள் எவை என்று தெரியுமா? பனி, மழையால் குளிரால் நாம் எப்படி நடுங்குகிறோம். அதுபோல்தான் தாவரங்களுக்கும் அது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கடுமையான பனிக்காலம் செடிகளின் வளர்ச்சியையே தடுக்கும். அது தாவரங்களை வளர விடாமல் செய்து, இலைகளை காயவைத்துவிடும். வேரை அழுகச் செய்துவிடும். எனவே நீங்கள் குளிர்காலத்தில் ஏன் விதைக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

மண்ணின் வெப்பநிலை குறையும்

விதைகளுக்கு ஈரப்பதமும் தேவை. வெப்பமும் தேவை. அப்போதுதான் அவற்றால் முளைத்து வரமுடியும். மேலும் அது மண்ணைவிட்டு வெளியேறி வர அதிகளவிலான சூரிய ஒளியும் தேவை. பூக்கள் பூக்கவும் சூரிய ஒளி தேவை. ஆனால் குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும். இதனால் மண்ணின் வளர்க்கும் திறன் குறைந்து காணப்படும். இது தாவரங்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தும். அதனால் விதைக்கும் விதைகள் முளைக்காமலே வீணாகும். செடி முளைக்க ஈரப்பதமும் தேவை. வெதுவெதுப்பும் வேண்டும். எனவே நீங்கள் குளிர் காலத்தில் விதைகளை விதைக்காதீர்கள்.

பனியால் சேதம்

அடர்ந்து வளரும் தாவரமாக இருந்தாலும், நல்ல பூக்கள் பூக்கும் தாவரமாக இருந்தாலும், அது குளிர் காலங்களில் வளர்வது கடுமையாக பாதிக்கப்படும். சில நேரங்களில் சில தாவரங்கள் கருகி இறந்துவிடும். ஏனென்றால், பனிக்காலத்தில் குளிர்ந்த காற்று, உறையும் பனியும் செடிகள் மற்றும் பூக்களை கொன்றுவிடும். விதைகளை அவை முளைக்கும் முன்னரே கூட அழித்துவிடும்.

ஒளி

விதைகள் முளைத்து வெளியே வரவேண்டுமெனில், அவற்றுக்கு அதிகளவிலான சூரிய ஒளி வை. ஒரு ஆரோக்கியமான செடிக்கும் அந்த சூரிய ஒளி தேவையாகும். ஆனால் குளிர் காலங்களில் விதைக்கு தேவையான சூரிய ஒளி கிடைக்கும் நாட்கள் குறைவாக இருக்கும். அவற்றுக்கு போதிய ஆற்றலும் கிடைக்காது. இதனால் செடிகளால் நன்றாக வளரவும் முடியாது.

தண்ணீர் தேக்கம்

பனிக்காலத்தில் குறிப்பாக மழைக்காலத்தில், மண்ணில் சில இடங்களில் தண்ணீர் தேங்குவது அதிகம் இருக்கும். மண்ணால் அதிகம் தேங்கும் தண்ணீரை உறிஞ்ச முடியாமல் போகும் நிலை ஏற்படும். தண்ணீர் வடியமுடியாமலும் அப்படியே தேங்கியே நிற்கும். சூரிய ஒளியில் தண்ணீர் நீராவியாகவில்லையென்றால், மண் நன்றாக காயாது. இதனால் கடைசியில் வேர்கள் அழுகிவிடும்.

மெதுவான வளர்ச்சி

தாவரங்கள் பனிக்காலத்தில் மெதுவாக வளரக்கூடியவை. உண்மையில் பூக்கள் பூக்கும் செடிகள் கூட, பூக்களுக்கு பதில் இலைகளாக முளைத்து தள்ளும். இதனால் விதைக்கப்படும் விதைகளும் தேவையற்றுப் போகும். பனிக்காலத்தில் விதைகள் முளைக்காது, செடிகள் மொட்டு விடாது, பூக்கள் பூக்காது. பழங்கள் பழுக்காது.

மகரந்த சேர்க்கை

சில தாவரங்கள், குறிப்பாக பழங்கள் மற்றும் பூக்களுக்கு மகரந்த சேர்க்கை என்பது மிகவும் அவசியம். பனிக்காலத்தில், பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் வராது. வேறு எந்த வகையிலும் மகரந்த சேர்க்கை நடக்காது. குறுக்கு மகரந்த சேர்க்கையும் நடைபெறாது. இதனால் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் நடைபெறாமல் போகும்.

இறுக்கமான மண்

அனைத்து மண்ணிலும் வெளிச்சம் மற்றும் காற்று புகும் தன்மை இருக்காது. குளிர் காலங்களில், இது பனி உறைந்து போவதால் நடக்கும். மண்ணின் மேல் பகுதி காய்ந்து இருக்கும். இதை நீங்கள் மண்ணை தொட்டே உணர்ந்துகொள்ள முடியும். இதனால் உங்கள் விதைகள் முளைக்காது.

நீங்கள் நேரம் மற்றும் பணத்தை செலவிடுகிறீர்கள்

எனவே புதிய விதைகளை நீங்கள் குளிர் காலங்களில் விதைப்பதை தவிர்க்கவேண்டும். குளிர் காலத்தில் விதைப்பது என்பது முற்றிலும் கால விரயம் செய்யும் வேலையாகும். எனவே உங்களிடம் உள்ள செடிகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் வேலையை மட்டும் குளிர் காலத்தில் செய்யவேண்டும். காற்று, வறட்சி மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவற்றில் இருந்து உங்கள் தாவரத்தை பாதுகாக்க வேண்டிய வேலைகளை மட்டும் நீங்கள் குளிர் காலத்தில் செய்யவேண்டும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி