தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பெண்கள் ஏன் கொய்யா இலை தேநீர் பருகவேண்டும்? இந்த 9 நன்மைகள் கிடைக்குமாம்! மாதவிடாய் வலி முதல் பல பலன்கள்!

பெண்கள் ஏன் கொய்யா இலை தேநீர் பருகவேண்டும்? இந்த 9 நன்மைகள் கிடைக்குமாம்! மாதவிடாய் வலி முதல் பல பலன்கள்!

Priyadarshini R HT Tamil

Dec 13, 2024, 11:57 AM IST

google News
கொய்யா இலைகளில் தேநீர் தயாரித்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
கொய்யா இலைகளில் தேநீர் தயாரித்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

கொய்யா இலைகளில் தேநீர் தயாரித்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்கள் ஏன் கொய்யா இலை தேநீரை பருகவேண்டும் என்பதற்கான 9 காரணங்கள் என்னவென்று பாருங்கள். கொய்யா இலைத் தேநீரை பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கொய்ய இலைத் தேநீரில் எண்ணற்ற உடல் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உங்கள் அன்றாட உணவில், குறிப்பாக பெண்கள் ஏன் கொய்யா இலைத் தேநீரை பருகவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். கொய்யா இலைத்தேநீரில் உங்கள் உடலுக்குத் தேவையான எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கொய்யா இலைத் தேநீர் உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்களுக்கு முடி உதிர்வைக் குறைக்கிறது. இது உங்களுக்கு ஆரோக்கியமான, அடர்த்தியான தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது உங்கள் தலைமுடியை வலுவாக்குகிறது. மேலும் அதன் பளபளப்பையும் அதிகரிக்கிறது.

உடல் எடையை பராமரிக்க உதவுகிறது

கொய்யா இலைத் தேநீர் உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் உடல் எடையை முறையாகப் பராமரிக்கவும், உங்கள் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.

செரிமான ஆரோக்கியம்

கொய்யா இலை தேநீரில் இயற்கை நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது நுண்ணுயிர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் உங்களின் செரிமான ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இது உங்களுக்கு ஏற்படும் வயிறு உப்புசத்தைப் போக்குகிறது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்னைகளையும் தீர்த்து, சிறப்பான குடல் ஆரோக்கியம் கிடைக்க வழிவகுக்கிறது.

மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது

கொய்யா இலை தேநீரில் அதிகளவில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது வலியைக் குறைக்கிறது மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்குகிறது. இது உங்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்கி சவுகர்யங்களைக் கொடுக்கிறது.

ஹார்மோன்கள் சமம்

இந்த தேநீருக்கு ஹார்மோன்களை சமப்படுத்தும் தன்மை உள்ளது. மேலும் இது மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியைப் போக்குகிறது. இது உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. மேலும் பெண்கள் ஆரோக்கியமான உடற்கட்டைப் பெற உதவுகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

கொய்யா இலைகளில் உள்ள வேதிப்பொருட்கள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது உங்களுக்கு ஏற்படும் பொதுவான தொற்றுக்களைப் போக்குகிறது. இது உங்கள் உடல் இயற்கை முறையில் நோய் எதிர்ப்பாற்றலைப் பெற உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கொய்ய இலை தேநீர் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றுகிறது. இது உங்கள் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச்செய்கிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் இதயம் நன்றாக செயல்படுகிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது.

ரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிக்கிறது

கொய்யா இலை தேநீர் உங்கள் உடலில் சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது. இது உங்களுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக நீரிழவு நோய் கொண்ட பெண்களுக்கு கொய்யா இலைத் தேநீர் மிகவும் சிறந்தது. இது உங்களுக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

ஆரோக்கியாமான சருமம்

கொய்யா இலை தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது முகப்பருக்கள், வயோதிகத்தோற்றம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடி, தெளிவான சருமத்தைக் கொடுக்கிறது. உங்களுக்கு இளமைத்தோற்றம் ஏற்படவும், பளபளக்கும் சருமத்தைக்கொடுக்கவும் உதவுகிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி