பழங்குடியின மக்களின் பார்பிக்யூ.. அமெரிக்காவின் பாரம்பரிய உணவு.. உலகம் முழுவதும் பரவிய உணவு வரலாறு
Dec 13, 2024, 09:51 AM IST
Barbecue: பூர்வீக அமெரிக்காவின் பாரம்பரிய உணவான பார்பிக்யூ உணவின் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக மத்திய அமெரிக்க பகுதியில் தான் இந்த பார்பிக்யூ உணவு தயாரிப்பு முறை தொடங்கியது.
Barbecue: பாரம்பரிய உணவுகளை தயாரிப்பதில் உலக நாடுகளில் இந்தியாவிற்கு தனி இடம் உள்ளது. இதுபோல எத்தனையோ வெளிநாட்டு உணவுகள் வர்த்தகம் செய்யும் வாணிபர்கள் மூலம் நமது நாட்டிற்குள் புகுந்து அனைவருக்கும் பிடித்த உணவாக மாறி உள்ளது. அதேபோல நமது நாடு உணவுகளும் பல நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டிற்கு மிகவும் பிடித்த உணவாக மாறி உள்ளன.
அப்படி வெளிநாட்டில் இருந்து நமது நாட்டிற்குள் புகுந்து அனைவருக்கும் பிடித்த உணவாக மாறியதுதான் பார்பிக்யூ. வறுக்கப்பட்ட இறைச்சி என்ற பெயரில் நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டாலும் அது உண்மையில் வறுக்கப்பட்ட இறைச்சி கிடையாது. வெப்ப தனலில் மிகவும் மெதுவாக சமைக்கப்படும் உணவுதான் பார்பிக்யூ. இப்படி சமைப்பது தான் பாரம்பரிய சமையல் முறையாக இருந்து வந்துள்ளது.
மத்திய அமெரிக்க பகுதியில் தான் இந்த பார்பிக்யூ உணவு தயாரிப்பு முறை தொடங்கியது. நீண்ட நாட்கள் உண்பதற்காக இந்த உணவு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. வத்தல் மற்றும் உலர் பழங்கள் எப்படி நீண்ட நாட்களுக்கு காயவைத்து பயன்படுத்தப்படுகிறதோ அதேபோலத்தான் இந்த பார்பிக்யூ உணவு முறையும்.
பழங்குடியின மக்களின் பார்பிக்யூ
கரீபியன் பழங்குடியின மக்கள் இறைச்சியை பல நாட்கள் பாதுகாப்பதற்காக வெயிலில் காய வைப்பார்கள். இப்படி இறைச்சியை பல நாட்கள் காயவைத்து பயன்படுத்தும் போது மிகப்பெரிய சிக்கல் ஒன்று இருக்கின்றது. காய வைத்த இறைச்சிகளில் சில நாட்களில் பூச்சிகள் புகுந்து அந்த உணவை பாழாக்கி விடும்.
இந்த பூச்சிகளை விரட்டுவதற்காகவே சிறிய புகையை உருவாக்கக்கூடிய தீயை பயன்படுத்தி இறைச்சியை அந்த நெருப்பின் மீது அடுக்கி வைத்து விடுவார்கள். புகை மூட்டத்தின் தாக்கத்தால் காய்ந்து போன இறைச்சியில் இருக்கக்கூடிய பூச்சிகள் தப்பித்து விடும் அல்லது இறந்துவிடும். இந்த முறை இறைச்சியை பாதுகாப்பதற்காக அப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.
காய்ந்த இறைச்சியில் பூச்சிகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த செயல்முறையை மேற்கிந்திய தீவுகளில் வசித்த பூர்வீக மக்கள் பார்பக்கோவா என்று அழைத்துள்ளனர். இதிலிருந்து மருவி பார்பிக்யூ என்ற வார்த்தை பிறந்துள்ளது. ஐரோப்பியர்கள் இந்தியாவை தேடி வந்த பொழுது அமெரிக்காவை கண்டுபிடித்துள்ளனர். அப்போது அங்கிருந்த மக்கள் தனித்துவமாக சமைக்கும் இந்த உணவு முறையை கண்டு வியந்துள்ளனர்.
ஐரோப்பிய பகுதிகளில் பரவல்
அதற்குப் பிறகு தென் அமெரிக்கா பக்கம் ஸ்பானிஷ் காரர்கள் குடியிருப்பும்போது இந்த பார்பிக்யூ முறையை அவர்களது நாட்டின் பக்கத்தில் பரப்பி உள்ளனர். இதுபோல ஐரோப்பியர்கள் மற்ற இடங்களில் குடியிருப்பும்போது தங்களது கால்நடைகள் மற்றும் பன்றிகள் உள்ளிட்டவைகளை தங்களோடு இடமாற்றி கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் தென் அமெரிக்கா பகுதிகளில் முதன்மை உணவாக பன்றிகள் மாறின. குறைந்த கவனிப்புடன் செழித்து வளரக்கூடிய உயிரினமாக பன்றி திகழ்ந்து வந்தது. இதனால் உணவுக்காக பன்றிகள் அதிகம் வளர்க்கப்பட்டன. இந்த பார்பிக்யூ உணவு முறையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பிரதான இறைச்சியாக பன்றி மாறியது.
இந்த காய்ந்த இறைச்சியை உணர்த்துவதற்காக குழிகள் மற்றும் புகை அடுப்புகள் உருவாக்கப்பட்டன. அந்த நெருப்பின் அனலில் வைத்து நீண்ட நேரம் சமைக்கும் முறை சற்று சலிப்பாக இருந்தாலும், இந்த உணவு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் உணவாக மாறியது. இந்த உணவைப் பெரிய திருவிழாக்களின் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு பெரிய கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களில் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால் பார்பிக்யூ விரைவில் சமைக்கக்கூடிய உணவாக மாறியது.
அனலில் உருவான உணவு
எப்போதும் சமைக்கக்கூடிய உணவைவிட மிகவும் பொறுமையாக வேக வைத்த இந்த உணவை அதிகப்படியான மக்கள் விரும்பி சாப்பிட தொடங்கினர். இந்த உணவு அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பார்பிக்யூ நாடு விட்டு நாடு சுவை பிரியர்கள் மூலம் மாறியது. தற்போது உலகம் முழுவதும் அனைத்து மக்களும் விரும்பக்கூடிய உணவாக பார்பிக்யூ மாறியது.
அந்தந்த நாடுகளுக்கு ஏற்றவாறு பன்றிகளால் சமைக்கப்பட்ட இந்த பார்பிக்யூ உணவு முறை ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் போன்ற இறைச்சிகள் கொண்டு சமைக்கப்பட்டது. அதேபோல காய்கறிகளையும் இதே பார்பிக்யூ முறையில் சமைத்து சில மக்கள் சாப்பிட்டார்கள். அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப சில சில மாற்றங்கள் செய்யப்பட்டு பார்பிக்யூ தற்போது உலகத்தில் இருப்பவர்கள் அனைவரின் விருப்பத்திலும் இருந்து வருகிறது. அனலால் சமைக்கப்படும் இந்த உணவானது தற்போது நெருப்பு பயன்படுத்தியும் சமைக்கப்படுகிறது.