சாதம் வடித்த கஞ்சியை தலைமுடிக்கு தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகளைப் பாருங்கள்!
Dec 13, 2024, 09:28 AM IST
சாதம் வடித்த கஞ்சியை தலைக்கு தேய்ப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
அரிசி வடித்த கஞ்சியை தலைமுடிக்கு தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அரிசி கஞ்சியை பல காலமாக நமது நாட்டில் தலைமுடி ஆரோக்கியத்துக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் உள்ள அமினோ அமிலங்கள் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவி செய்கிறது. உங்கள் தலைமுடிக்கு நீங்கள் தொடர்ந்த் சாதம் வடித்த கஞ்சியை பயன்படுத்தினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
கூந்தலை வலுப்படுத்துகிறது
சாதம் வடித்த கஞ்சியில் அமிமோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இதில் உள்ள புரதங்கள் தலைமுடிக்கு வலுவைக்கொடுக்கிறது. இதனால் தலைமுடி சிதைவது குறைகிறது. இது தலைமுடியின் மீள்தன்மையை அதிகரிக்கிறது. இதை உங்கள் தலைமுடிக்கு தினமும் உபயோகித்தால், தலைமுடியில் நீங்கள் எந்த ஹேர்ஸ்டைல் செய்தாலும் அதனால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி வெயில், சுற்றுச்சூழல் பாதிப்புக்களால் ஏற்படும் சேதங்களையும் தடுக்கிறது.
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது
சாதம் வடித்த கஞ்சியில் உள்ள ஊட்டச்சத்துக்களான இனோசிட்டால், ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வேர்க்கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, அது வலுவான மற்றும் அடர்த்தியான தலைமுடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. நாட்கள் செல்லச்செல்ல இந்த மாற்றத்தை நீங்கள் உணரமுடியும்.
மிருதுவான பளபளக்கும் கூந்தல்
சாதம் வடித்த கஞ்சி உங்கள் தலைமுடியை சரி செய்கிறது. இது உங்கள் தலைமுடியை மிருவாக்குகிறது. இதனால் தலைமுடியின் வெளித்தோற்றத்துக்கு பொலிவு தருகிறது. கூடுதலான இதன் நீர்ச்சத்துக்கள், சிக்குகள் இல்லாமல் கூந்தலைப் பாதுகாக்கிறது. இதனால் உங்கள் தலைமுடி மிருதுவாகவும், எளிதாக பராமரிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இதனால் உங்கள் தலைமுடியில் நீங்கள் என்ன ஹேர் ஸ்டைல் வேண்டுமானாலும் செய்ய முடியும்.
சேதத்தைத் தடுக்கிறது
சாதம் வடித்த கஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது தலைமுடியை சுற்றுச்சூழல் அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. இதனால் மாசு, சூடு, புறஊதாக்கதிர்களிடம் இருந்து தலைமுடிக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இது உங்கள் தலைமுடிக்கு பாதுகாப்பு கவசம் அளித்து, தலைமுடியின் நுணிகளில் வெடிப்புகள் ஏற்படாமல் காக்கிறது. மேலும் அன்றாடம் ஏற்படும் தலைமுடி சேதத்தைக் குறைக்கிறது.
வேர்கால்களுக்கு நீர்ச்சத்துக்கள்
வறண்ட தலைமுடியின் வேர்கால்களால் பொடுகுத்தொல்லை ஏற்படுகிறது. இதனால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதால், உங்களுக்கு அசவுகர்யம் ஏற்படலாம். சாதம் வடித்த கஞ்சியில் உள்ள நீர்ச்சத்துக்கள், உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளித்து, வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. இது வறட்சியைக் குறைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த வேர்க்கால்களின் ஆரோக்கியமும் தக்கவைக்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்