தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கண் பார்வையை கூராக்க வேண்டுமா? இதோ இவற்றை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள்!

கண் பார்வையை கூராக்க வேண்டுமா? இதோ இவற்றை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Dec 02, 2024, 06:00 AM IST

google News
கண் பார்வையை கூராக்க நீங்கள் செய்யவேண்டியவை என்ன?
கண் பார்வையை கூராக்க நீங்கள் செய்யவேண்டியவை என்ன?

கண் பார்வையை கூராக்க நீங்கள் செய்யவேண்டியவை என்ன?

உங்கள் கண் பார்வையை கூராக்கவேண்டுமெனில் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று பாருங்கள். உங்கள் கண்ணாடி கழட்டி வீசிவிட்டு, உங்கள் கண் பார்வையை கூராக்கும் நுட்பங்களை தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கண் பார்வையை கூராக்க வேண்டுமென்றால் தொடர்ந்து நீங்கள் முயற்சியும் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு ஆரோக்கியமான கண்கள் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த எளிய நுட்பங்களை உங்கள் வீட்டில் பின்பற்றுங்கள் போதும். அதை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்தாலே போதும், பார்வை இயற்கை முறையில் கூராகும். நீங்கள் அதற்கு கடைபிடிக்கவேண்டிய பழக்கவழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

20-20-20 விதியை பழகுங்கள்

நீங்கள் அதிக நேரம் திரை பார்ப்பது உங்கள் கண்ணில் சோர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதை எதிர்த்து நீங்கள் போராட வேண்டுமெனில், நீங்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் உற்றுப்பார்க்கவேண்டும். நீங்கள் திரையில் மூழ்கியிருக்கும்போதோ இதைச் செய்யவேண்டும். இந்த நுட்பம் உங்களின் கண்களில் உள்ள தசைகளை அமைதிப்படுத்தும். உங்களுக்கு கண்களில் அழுத்தம் ஏற்படாமல் காக்கும். இது உங்கள் கண் பார்வைக்கு சிறந்தது.

கண் பயிற்சிகள்

உங்கள் கண்களில் உள்ள தசைகளை வலுப்படுத்தினால், அது உங்கள் கவனம் மற்றும் கண்களின் நெகிழ்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் கண்ணுக்கு அருகில் உள்ள ஒரு பொருளை சிறிது நேரம் உற்றுப்பாருங்கள். அடுத்து தொலைவில் உள்ள ஒரு பொருளை சிறிது நேரம் உற்று நோக்கவேண்டும். இதனால் உங்கள் பார்வை தெளிவாகும். சில நிமிடங்களுக்கு கண்களை தொடர்ந்து சிமிட்டவேண்டும். அப்போது உங்கள் கண்கள் அமைதிபெறும்.

கண் பார்வையை கூராக்கும் உணவுகள் சாப்பிடவேண்டும்

நீங்கள் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்கவேண்டும். அதில் வைட்டமின் ஏ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், லூடின்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் கட்டாயம் இருக்கவேண்டும். கேரட், கீரைகள், வால்நட்கள் மற்றும் கண் ஆரோக்கியத்தை தரும் உணவுகள் இருக்கவேண்டும். இவற்றை அன்றாடம் உங்கள் உணவில் உட்கொள்வதை நீங்கள் வழக்கமாக்கவேண்டும். இந்த உணவுகள் உங்களுக்கு கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும். இது உங்கள் பார்வையைக் கூராக்கும்.

போதிய உறக்கம்

உங்கள் கண்களுக்கு போதிய ஓய்வு தேவை. அப்போதுதான் அது தன்னை சரி செய்து கொள்ளும். அன்றாடம் கண்களில் ஏற்படும் கடுமையான அபாயத்தைப்போக்கும். உறக்கம் தடைபட்டாலே அது உங்களுக்கு வறட்சி, எரிச்சல் மற்றும் கண்கள் மங்கலாக தெரிவது ஆகிய தொல்லைகளை ஏற்படுத்தும். எனவே தினமும் 7 முதல் 8 மணி நேர உறக்கம் என்பது கட்டாயம் வேண்டும். இது உங்கள் கண் ஆரோக்கியம், புத்துணர்வு மற்றும் முழு உடல் ஆரோக்கியம் என அனைத்துக்கும் தேவையான ஒன்றாகும்.

புறஊதாக் கதிர்களிடம் இருந்து உங்களை கண்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்

சூரிய ஒளியில் செல்லும்போது கண்களின் திசுக்கள் பாதிக்கப்படும். இதனால் எப்போதும் நீங்கள் வெளியே செல்லும்போது கண்களில் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ளவேண்டும். இது உங்கள் கண்களுக்கு சூரியஒளியில் செல்லும்போது 100 சதவீதம் புறஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பைத்தரும். அதிக சூரிய வெளிச்சம் இருக்கும்போது நேரடி சூரியஒளியில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்கும். இது உங்கள் கண்களை புறஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும்.

நீர்ச்சத்துடன் இருங்கள்

உங்கள் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்தால், உங்களுக்கு அசவுகர்யங்களும், எரிச்சலும் ஏற்படும். எனவே போதிய அளவு தண்ணீர் பருகவேண்டும். அப்போதுதான் கண்ணீர் உற்பத்தியும் சரியாக நடக்கும். கண்ணும் நீர்ச்சத்துடன் இருக்கும். எனவே தினமும் 2 லிட்டர் தண்ணீர் கிட்டத்தட்ட 8 டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாகக்கொள்ளுங்கள். உங்கள் கண்களில் ஈரம் இருக்கவேண்டும். அது ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும்.

நீங்கள் பார்க்கும் திரையின் ப்ரைட்னஸை குறைக்கவேண்டும்

அதிகளவில் திரையில் உள்ள ப்ரைட்னஸ் கூட உங்கள் கண்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். உங்கள் கவனத்தை சிதறடிக்கும். எனவே உங்கள் திரையின் ப்ரைட்னஸை நீங்கள் குறைக்கவேண்டும். உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளியின் அளவைப் பொறுத்து உங்கள் திரையின் ஒளியும் இருக்கவேண்டும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் ஆன்டிக்ளேர் ஃபில்டர்களை உபயோகிக்கவேண்டும். திரைக்கும் கண்களுக்குமான தூராத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் கண்களில் அழுத்தம் குறையும்.

கண் பரிசோதனைகளை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்

உங்கள் கண்களில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதை முன்னரே கண்டுபிடிக்கவேண்டுமெனில் நீங்கள் அவ்வப்போது கண் மருத்துவரிடம் சென்று உங்கள் கண்களை பரிசோதித்துக்கொள்ளவேண்டும். அவர்கள் உங்கள் கண்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதுகுறித்து உங்களுக்கு தீர்வு கொடுப்பார். எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்களை பரிசோதித்துக்கொள்வது நல்லது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி