கேரட் பாயாசம்! ஒருமுறை சாப்பிட்டால் திரும்ப, திரும்ப சாப்பிட தூண்டும் சுவை நிறைந்தது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கேரட் பாயாசம்! ஒருமுறை சாப்பிட்டால் திரும்ப, திரும்ப சாப்பிட தூண்டும் சுவை நிறைந்தது!

கேரட் பாயாசம்! ஒருமுறை சாப்பிட்டால் திரும்ப, திரும்ப சாப்பிட தூண்டும் சுவை நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Nov 15, 2024 02:52 PM IST

கேரட் பாயாசம், ஒருமுறை சாப்பிட்டால் திரும்ப, திரும்ப சாப்பிட தூண்டும் சுவை நிறைந்தது. உங்கள் வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களின் இனிமையை மேலும் அதிகரிக்கும்.

கேரட் பாயாசம்! ஒருமுறை சாப்பிட்டால் திரும்ப, திரும்ப சாப்பிட தூண்டும் சுவை நிறைந்தது!
கேரட் பாயாசம்! ஒருமுறை சாப்பிட்டால் திரும்ப, திரும்ப சாப்பிட தூண்டும் சுவை நிறைந்தது!

கேரட்டின் நன்மைகள்

கேரட், கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. மாலை கண் நோயை அடிதது விரட்டுகிறது. கேரட்டில் உள்ள அதன் அடர் ஆரஞ்சு, சிவப்ப நிறம் அதில் உள்ள பீட்டா கரோடின்களை குறிக்கிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டைப் பயன்படுத்திதான் உடல் வைட்டமின் ஏஆக மாற்றுகிறது. கண் பார்வை ஆரோக்கியத்தை பராமரிக்க கேரட் உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. செரிமானத்தை தூண்டுகிறது. உடல் எடை குறைய உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்கிறது. புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. பல்வேறு வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சிகளையும் கேரட் தடுக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. உங்கள் மூளையின் திறனை அதிகரிக்கிறது. கேரட்டில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மூளை ஆரோக்கியத்துக்கு உகந்தது என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப்போக்குகிறது.

தேவையான பொருட்கள்

கேரட் – அரை கிலோ

ஜவ்வரிசி – 150 கிராம்

பால் – அரை லிட்டர்

மில்க் மெய்ட் – 2 ஸ்பூன்

நெய் – 50 கிராம்

சர்க்கரை – 300 கிராம்

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

திராட்சை – ஒரு கைப்பிடியளவு

பாதாம் – ஒரு கைப்பிடியளவு

ஏலக்காய் – 2

செய்முறை

கடாயில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி, திராட்சை என அனைத்தையும் நன்றாக சிவக்க வறுக்கவேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு, எஞ்சிய நெய்யில், தோல் நீக்கி துருவிய கேரட்டையும் அதே நெய்யில் சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். கேரட்டிலும் பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அதை தனியாக ஆறவைத்துவிடவேண்டும். ஜவ்வரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் நன்றாக ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அது நன்றான கொதித்தவுடன், அதில் ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வேகவைக்கவேண்டும். பாலை தனியான தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக்கொள்ளவேண்டும்.

வதக்கி ஆறிய கேரட்டை, வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாமில் பாதி சேர்த்து, மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதை வெந்துகொண்டிருக்கும் ஜவ்வரிசியில் சேர்க்கவேண்டும். இவையிரண்டையும் சேர்த்து நன்றாக வேகவைக்கவேண்டும். இதனுடன் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சிய பாலை சேர்க்கவேண்டும்.

அதில் தேவையான அளவு சர்க்கரை, மில்க் மெய்ட் சேர்த்து நன்றாக கொதிக்க்விடவேண்டும். பாயாசம் கெட்டியானவுடன் ஏலக்காய்ப்பொடி மற்றும் எஞ்சியுள்ள முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து இறக்கினால், சூப்பர் சுவையான மணமணக்கும் கேரட் பாயாசம் தயார்.

இதை உங்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியங்களில் பரிமாறலாம் அல்லது வீட்டில் விரதம் மற்றும் முக்கிய நாட்களில் செய்து சாப்பிடலாம். சாமிக்கு படையல் போடுவதற்கும் செய்யலாம்.

கேரட் பாயாசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுலவார்கள். இது இனிப்பு சுவை நிறைந்தது என்பதால் அனைவருக்கும் பிடிக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.