ஓரிதழ் தாமரை ரசம்; ஆண்மை, உடலுறவு எண்ணம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும்!
Dec 01, 2024, 02:49 PM IST
ஓரிதழ் தாமரை ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
ஓரிதழ் தாமரையின் நன்மைகள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஓரிதழ் தாமரை ஆண்மையை அதிகரிக்கக்கூடியது. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. இதை தினமும் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறிப்பிடும் அளவு குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்கள் உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் குறிக்கிறது. அனீமியாவுக்கு மருந்தாகிறது. இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. உடலின் சூட்டை குறைக்கிறது. இது கிராமப்புறங்களில் அதிகம் காணப்படும் தாவரம் ஆகும். அலர்ஜி மற்றும் வலியை குறைக்கும் குணங்கள் நிறைந்தது. உடலுறவு ஊக்கம் வராதவர்கள் இதை ஒரு மண்டலம் பருகினால் அவர்களின் காம உணர்வுகள் அதிகரிக்கும்.
இந்த தாவரம் தண்ணீர் வற்றாத நிலப்பரப்பில் வளரக்கூடியது ஆகும். இது 60 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. பிங்க மற்றும் பர்பிள் நிறத்தில் பூக்கள் பூக்கும். இந்தப்பூக்கள் ஆண்களுக்கு மிகவும் நல்லது. இதில் இருந்து டானிக்குகள் தயாரிக்கப்படுகிறது. இதன் வேர்கள் சிறுநீர் தொற்றுகளை போக்குகிறது. குழந்தைகளுக்கு குடல் இயக்கத்தை சரிசெய்கிறது. இதன் அறிவியல் பெயர் ஹைபான்தஸ் என்தாகும்.
தேவையான பொருட்கள்
ஓரிதழ் தாமரை இதழ்கள் - ஒரு கைப்பிடி
ஓரிதழ் தாமரைப் பொடி - 2 டீஸ்பூன்
(உங்கள் பகுதியில் ஃபிரஷ்ஷாக கிடைத்தால், ஓரிதழ் தாமரைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஓரிதழ் தாமரைப்பொடியை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக்கொள்ளுங்கள்)
தக்காளிப் பழம் - 3
பருப்புத்தண்ணீர் - 3 டம்ளர்
(பருப்பை வேகவைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்)
தட்டிய பூண்டுப் பல் - 6
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் நெய்விட்டு, சூடானவுடன், கடுகு, உளுந்து, சேர்க்கவேண்டும். அடுத்து மிளகு, சீரகம், பூண்டு பற்கள், கறிவேப்பிலை என அனைத்தையும் தட்டி சேர்க்கவேண்டும். இதில் மசித்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து ஓரிதழ் தாமரை பொடியையும் சேர்த்து வதக்கவேண்டும்.
பூவாக எடுத்தால் அதையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவேண்டும். தேவையான அளவு உப்பு, பருப்புத் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, பரிமாறினால் ஓரிதழ் தாமரை ரசம் தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சூப் போல் பருகலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்