கண்களில் கண்ணீர்..ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா - புதிய படம் போஸ்டர் மீண்டும் வருகிறாளா அருந்ததி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கண்களில் கண்ணீர்..ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா - புதிய படம் போஸ்டர் மீண்டும் வருகிறாளா அருந்ததி?

கண்களில் கண்ணீர்..ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா - புதிய படம் போஸ்டர் மீண்டும் வருகிறாளா அருந்ததி?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 07, 2024 04:02 PM IST

கண்களில் கண்ணீர் , ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா நடிக்கும் காதி பட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும் மீண்டும் வருகிறாளா அருந்ததி என பலரும் கமெண்டுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

கண்களில் கண்ணீர்..ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா - புதிய படம் போஸ்டர் மீண்டும் வருகிறாளா அருந்ததி?
கண்களில் கண்ணீர்..ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா - புதிய படம் போஸ்டர் மீண்டும் வருகிறாளா அருந்ததி?

பான் இந்தியா படம்

அனுஷ்கா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த புதிய படத்துக்கு காதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. யுவி கிரியேஷன்ஸ் வழங்க படத்தை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ்பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படமாக காட்டி உருவாகிறது.

அனுஷ்காவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர்கள் இன்று இப்படத்தின் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதிரடி தோற்றத்தில் மிரட்டலான லுக்கில் அனுஷ்காவை அறிமுகப்படுத்தும் இந்த போஸ்டரில், அனுஷ்காவின் தலை மற்றும் கைகளில் இருந்து ரத்தம் சொட்டக் காணப்படுகிறார். நெற்றியில் பொட்டு திலகமிடப்பட்டுள்ளது. அவரது கண்ணீருடன் கூடிய கண்களும் இரண்டு மூக்கு வளையங்களும் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக உள்ளதுடன், படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.

இந்த போஸ்டரில் உள்ள ஒவ்வொரு அம்சமும், ரத்தம் தெறிப்பதில் இருந்து கதாப்பாத்திரத்தின் அதிரடி தோற்றம் வரை, இந்தப்படம் மிக அழுத்தமான, யதார்த்தத்தை தத்ரூபமாக காட்டும் படமாக இருக்குமென்பதை சொல்கிறது.

காதி பட போஸ்டர்
காதி பட போஸ்டர்

காதி எப்படிப்பட்ட படம்

விக்டிம், கிரிமினல், லெஜண்ட் என்ற டேக்லைன், “Ghaati” வழக்கமான கதையைத் தாண்டியதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இது மனிதநேயம், உயிர்வாழ்வு மற்றும் மீட்பு பற்றிய ஆய்வாக உள்ளது.

க்ரிஷின் இயக்கத்தில் ஒரு மாறுபட்ட அனுபவத்தை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம். இது சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டவரலாற்று நாயகியின் கதை என கூறப்படுகிறது.

Ghaati ஒரு க்ரிப்பிங் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகிறது, க்ரிஷ் அனுஷ்காவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி ஆக்சன் நாயகியாக இந்த படத்தில் காட்டவுள்ளாராம்.படம் தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ளது.

காதி தொழில்நுட்ப குழு

ராஜீவ் ரெட்டி, சாய்பாபு ஜகர்லமுடி தயாரித்துள்ள Ghaati திரைப்படத்தில் சிறப்பு மிக்க பிரபலமான தொழில்நுட்பக் குழு உள்ளது. மனோஜ் ரெட்டி கடசானி ஒளிப்பதிவு செய்ய, நாகவெல்லி வித்யா சாகர் இசையமைக்கிறார். படத்துக்கு தோட்டா தரணி கலை இயக்குனராகவும், சாணக்யா ரெட்டி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் கதை எழுத, சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார்.

அதிக பட்ஜெட் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப தரங்களுடன் பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்டமான திரைப்படமாக படம் உருவாகிறது. இந்த பான் இந்தியா திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

அனுஷ்கா ஷெட்டி படங்கள்

தெலுங்கில் வெளியான சூப்பர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அனுஷ்கா ஷெட்டி முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தார். தமிழில் மாதவன் ஜோடியாக ரெண்டு படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் சிங்கம் சீரிஸ் படங்கள், விஜய்யுடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால், ரஜினிகாந்துடன் லிங்கா உள்பட பல படங்களில் நடித்தார்.

அருந்ததி படம் மூலம் பான் இந்தியா அளவில் பேசப்பட்ட நடிகை அனுஷ்கா, அதன் பின்னர் பாகுபலி சீரிஸ் படங்கள் மூலம் உலக பேமஸ் ஆனார். பாகுபலி படங்களுக்கு பிறகு பாகமதி, நிசப்தம், மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி போன்ற படங்களில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது பான் இந்தியா படமாக உருவாகி வரும் காதி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மலையாளத்தில் காதனார் - தி வைல்டு சார்சரர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.