தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கல்யாண வீட்டு சேனைக் கிழங்கு வறுவல்; மீண்டும், மீண்டும் வேண்டும் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!

கல்யாண வீட்டு சேனைக் கிழங்கு வறுவல்; மீண்டும், மீண்டும் வேண்டும் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!

Priyadarshini R HT Tamil

Dec 01, 2024, 04:10 PM IST

google News
சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?
சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு – கால் கிலோ

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் – கால் கப்

சோம்பு – ஒரு ஸ்பூன்

கசகசா – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

ஆம்சூர் பொடி – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு தாராளமாக எடுத்துக்காள்ளவேண்டும்.

முன் குறிப்பு

சேனைக்கிழங்கை தோல் சீவி நீளமான துண்டுகளாக நறுக்கி அல்லது உங்களுக்கு பிடித்த வகையில் துண்டுகளாக்கி நறுக்கி ஆவியில் வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, தேங்காய், பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு சேர்த்து மசாலா அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

செய்முறை

கடாயில் தாராளமாக எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் வேகவைத்துள்ள சேனைக்கிழங்கை பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியவுடன், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அத்துடன் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவேண்டும்.

கடைசியாக ஆம்சூர் பவுடர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு சேனைக்கிழக்கு வறுவல் தயார். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். அனைத்து வெரைட்டி சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். சூப்பர் சுவையாக இருக்கும்.

மேலும் ஒரு ரெசிபியையும் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

சப்பாத்தி மாவு செய்ய

கோதுமை மாவு – ஒன்றரை கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

முட்டை கலவை செய்ய

முட்டை - 4

உப்பு – தேவையான அளவு

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 8 பல் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – அரை இன்ச் (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் போட்டு கலந்து, தேவையான அளவு இளஞ்சூடான தண்ணீரை ஊற்றி, மாவை நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், சிறிய உருண்டைகளாக பிரித்து, உருட்டி சப்பாத்திபோல் தேய்த்து கொள்ளவேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தோசைக்கல்லை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டெடுக்கவேண்டும். அடுத்து சப்பாத்தியின் ஒருபுறத்தில், செய்து வைத்த முட்டை கலவையில் சிறிதளவு ஊற்றி மீண்டும் அதை திருப்பிப்போட்டு சுட்டு எடுக்கவேண்டும். இரண்டுபுறமுமே நன்றாக வெந்ததும் முட்டை சப்பாத்தி தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள சாஸ், ஏதேனும், சைவ, அசைவ கிரேவியை வைத்துக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி