தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vela Fish Fry : வேளா மீன்வறுவல்; வாழை இலையில் வைத்து வறுத்து அசத்த வேண்டுமா? இதோ ரெசிபி!

Vela Fish Fry : வேளா மீன்வறுவல்; வாழை இலையில் வைத்து வறுத்து அசத்த வேண்டுமா? இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil

Mar 31, 2024, 08:00 AM IST

google News
Vela Fish Fry : மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.
Vela Fish Fry : மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.

Vela Fish Fry : மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.

தேவையான பொருட்கள்

வேளா மீன் – ஒரு கிலோ

வாழை இலை – தேவையான அளவு

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – 3 ஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பொட்டுக்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 5

இஞ்சி – ஒரு துண்டு (நறுக்கியது)

பூண்டு – 5 பல்

புளி – சிறிதளவு

மிளகாய் – 12

கல் உப்பு – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

எலுமிச்சைபழச்சாறு – அரை பழத்தின் சாறு

செய்முறை –

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மல்லித்தூள், மிளத்தூள், சீரகத்தூள், பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

பின்னர் இஞ்சி, பூண்டு, புளி, ப்யாத்கே மிளகாய் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுக்கவேண்டும்.

பின்னர் கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, நன்றாக ஆறவிட்டு அதில் எலுமிச்சைபழச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

மீனின் இரண்டு பக்கமும் கிறீ விட்டு மசாலாவை தடவி மூடிவைத்து ஒரு மணிநேரத்திற்கு மேல் நன்றா ஊறவிடவேண்டும். அதற்கு மேலும் ஊறலாம். ஒரு மணி நேரம் கட்டாயம் ஊறவேண்டும்.

பின்னர் வாழை இலையை தேவையான அளவு வெட்டி அலசி காயவைத்து, அதில் எண்ணெய் தடவி, தயார் செய்த மீனை வைத்து மூடி இலையை கட்டிக்கொள்ளவேண்டும்.

பின், அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தயார் செய்த மீனை வைத்து இரண்டு புறமும், 15 நிமிடங்கள் நன்றாக வேகவிடவேண்டும்.

இலையில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவேண்டும். இதை இலையில் வைத்துக்கொண்டு தேவைப்படும்போது எடுத்து வறுத்தும் செய்துகொள்ளலாம்.

வேளா மீன் வறுவல் தயார். வாழை இலையில் சூட்டு ருசியுடன் இதுபோல் செய்யும் மீன் சுவை அதிகமாக இருக்கும்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மீன் இந்த உலகிலேயே மிகச்சிறந்த உணவாக உள்ளது.

மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.

மீனில் உயர்தர புரதச்சத்து, அயோடின் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்கள் மிகுந்த ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது. சால்மன், டூனா, மெக்கரீல் உள்ளிட்ட மீன்களில் கொழுப்பு சார்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

உலகில் இளம் வயது மரணத்துக்கு பெரும்பாலான காரணமாக இருப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோய்கள். மீன் இதயத்துக்கு இதமான உணவாக உள்ளது.

உடல் வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மிகவும் முக்கியமானவை. இவை மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை போக்க மீன்கள் உதவுகின்றன. இது மன நிலை, மன சோர்வு, குறைவான பலம் மற்றும் வாழ்வில் ஆர்வமின்மை ஆகிய பிரச்னைகளை தீர்க்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மீன்களில் இருந்து அதிகளவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. மீன் எண்ணெய்களிலும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. அது உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

அசைவ உணவுகள் விரும்பி சாப்பிடாதவர்கள் கூட கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. உடலுக்கு இத்தனை நன்மைகளை கொடுக்கும் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

கிழங்கான் மீன்களில் கருப்பு கிழங்கான், வெள்ளை கிழங்கான் என இரண்டு வகை மீன்கள் உள்ளன. கிழங்கான் மீனை சாப்பிடுவதால் மூல நோய் பிரச்னைகள் குணமாகவும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்கான் மீனை ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி