Masala Powder : சைவம்-அசைவம் இரண்டு குழம்புக்கும் மணமணக்க மிளகாய் – மல்லித்தூள் வீட்டிலேயே தயார் செய்யலாம்! இதோ டிப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Masala Powder : சைவம்-அசைவம் இரண்டு குழம்புக்கும் மணமணக்க மிளகாய் – மல்லித்தூள் வீட்டிலேயே தயார் செய்யலாம்! இதோ டிப்ஸ்!

Masala Powder : சைவம்-அசைவம் இரண்டு குழம்புக்கும் மணமணக்க மிளகாய் – மல்லித்தூள் வீட்டிலேயே தயார் செய்யலாம்! இதோ டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Published Feb 07, 2024 12:24 PM IST

Masala Powder : சைவம்-அசைவம் இரண்டு குழம்புக்கு மணமணக்க மிளகாய் – மல்லித்தூள் வீட்டிலேயே தயார் செய்யலாம்! இதோ டிப்ஸ்!

Masala Powder : சைவம்-அசைவம் இரண்டு குழம்புக்கு மணமணக்க மிளகாய் – மல்லித்தூள் வீட்டிலேயே தயார் செய்யலாம்! இதோ டிப்ஸ்!
Masala Powder : சைவம்-அசைவம் இரண்டு குழம்புக்கு மணமணக்க மிளகாய் – மல்லித்தூள் வீட்டிலேயே தயார் செய்யலாம்! இதோ டிப்ஸ்!

நீங்கள் இந்த ஒரு பொடியை வீட்டில் தயாரித்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு வீட்டிலேயே நல்ல மசாலாப்பொடி கிடைக்கும்.  அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் உங்களுக்கு உதவும். இந்த மசாலவை நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் 6 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும். 

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை 

நாட்டு மல்லி விதைகள் – 2 கிலோ

(நாட்டு மல்லிதான் உடலுக்கு நல்லது மற்றும் அதிக சுவை மற்றும் மணம் கொடுக்கும். இதில் தூசி அதிகம் இருக்கும். அதனால் இதை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குச்சி மிளகாய் – 1 கிலோ

காரம் அதிகம் தரும்

நாட்டு மிளகாய் – ஒரு கிலோ

கலர் தரும் மிளகாய் – ஒரு கிலோ

இதுபோல் 3 மிளகாய் வகை மிளகாய்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிறம், சுவை, மணம் என அனைத்தும் நன்றாக இருக்கும்.

இவையனைத்தையும் நன்றாக ஒரு நாள் மொட்டை மாடி வெயிலில் காய வைத்துக்கொள்ளவேண்டும். மிளகாயை கையில் எடுத்து உடைத்து பார்க்கும்போது அது நன்றாக மொறுமொறுவென்று வரவேண்டும். அப்போது அது அரைக்க தயாராகிவிட்டது என்று பொருள்.

மிளகு – 75 கிராம்

சீரகம் – 150 கிராம்

சோம்பு – 200 கிராம்

புழுங்கல் அரிசி – 400 கிராம்

கடலைப்பருப்பு – 400 கிராம்

இந்த முன்று மிளகாய்களையும் ஒன்றாக சேர்த்து மில்லில் கொடுத்து அரைத்து விடவேண்டும். இதை காய வைப்பதற்கு முன்னரும், பின்னரும் அதில் உள்ள தூசிகளை அகற்றிவிடவேண்டும்.

வரமல்லி விதைகளையும் நன்றாக சுத்தம் செய்து காய வைத்துக்கொள்ள வேண்டும். மல்லி அரைக்கும்போது அதனுடன் மிளகு, சீரகம், சோம்பு, கடலை பருப்பு, புழுங்கல் அரிசி சேர்த்துதான் அரைக்க வேண்டும். இல்லாவிட்டால் மல்லித்தூள் மணக்காது. மேலும் மல்லித்தூள் மண்ணு போல் சுவையில்லாமல் இருக்கும்.

இந்த பொருட்களையும் வறுத்து அரைக்க வேண்டும். அனைத்தையுன் ஒன்றன்பின் ஒன்றாக வறுக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து அதிகளவில் வறுபட வேண்டிய அவசியமில்லை. சிறிது பச்சை தன்மை போகும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.

அரிசியையும், கடலை பருப்பையும் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் நன்றாக பொரிந்து சிவந்து வரவேண்டும்.

வறுத்த அனைத்தையும் வரமல்லியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக ஆறவைத்து மில்லில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

சாம்பார், கறிக்குழம்பு, மீன் குழம்பு, வறுவல் என அனைத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதே பக்குவத்தில் அரைக்கும்போது பொடி நல்ல வாசனையுடன் இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9