தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vegetable Aval : நவராத்திரி ஸ்பெஷல் வெஜிடபுள் அவல்.. குழந்தைகளுக்கு சத்தானது மட்டுமல்ல.. பெரியவர்களும் நல்லது..

Vegetable Aval : நவராத்திரி ஸ்பெஷல் வெஜிடபுள் அவல்.. குழந்தைகளுக்கு சத்தானது மட்டுமல்ல.. பெரியவர்களும் நல்லது..

Oct 03, 2024, 11:42 AM IST

google News
Vegetable Aval : கொலு வைப்பதும், அகண்ட தீபம் ஏற்றுவதும் எத்தனை முக்கியமோ அதே போல் நைவேத்தியம் படைப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி நவராத்திரி நாட்களில் நாம் கடவுளுக்கு பல நைவேத்தியம் வைக்கிறோம் அதற்கு இப்படி ஒரு மல்டி வெஜிடபுள் அவல் செய்யலாம். எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
Vegetable Aval : கொலு வைப்பதும், அகண்ட தீபம் ஏற்றுவதும் எத்தனை முக்கியமோ அதே போல் நைவேத்தியம் படைப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி நவராத்திரி நாட்களில் நாம் கடவுளுக்கு பல நைவேத்தியம் வைக்கிறோம் அதற்கு இப்படி ஒரு மல்டி வெஜிடபுள் அவல் செய்யலாம். எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

Vegetable Aval : கொலு வைப்பதும், அகண்ட தீபம் ஏற்றுவதும் எத்தனை முக்கியமோ அதே போல் நைவேத்தியம் படைப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி நவராத்திரி நாட்களில் நாம் கடவுளுக்கு பல நைவேத்தியம் வைக்கிறோம் அதற்கு இப்படி ஒரு மல்டி வெஜிடபுள் அவல் செய்யலாம். எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

Vegetable Aval : நவராத்திரி விழா இன்று முதல் தொடங்கவுள்ளது, மேலும் இந்த பண்டிகையின் போது எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பது ஒரு பொதுவான சடங்காகும். உண்ணாவிரதத்தின் போது ஆரோக்கியமாக இருக்க நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். நவராத்திரி என்பது தீய அரக்கன் மகிஷாசுரனை துர்கா தேவி வென்றதை நினைவுகூரும் ஒன்பது நாள் கொண்டாட்டங்கள். ஒவ்வொரு நாளும் அம்மன் வழிபாட்டின் போது தேவியின் வெவ்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்படுகிறது. உடலையும் மனதையும் தூய்மைப்படுத்த பக்தர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர். உண்ணாவிரதம் என்பது சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்ப்பதை உள்ளடக்குகிறது. உடல் அளவில், இது உடலை நச்சுத்தன்மை நீக்க உதவுகிறது. நவராத்திரி நாட்களில் கலசம் வைப்பதும், கொலு வைப்பதும், அகண்ட தீபம் ஏற்றுவதும் எத்தனை முக்கியமோ அதே போல் நைவேத்தியம் படைப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி நவராத்திரி நாட்களில் நாம் கடவுளுக்கு பல நைவேத்தியம் வைக்கிறோம் அதற்கு இப்படி ஒரு மல்டி வெஜிடபுள் அவல் செய்யலாம். எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அவல் - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

கேரட், 1 கப்

பீன்ஸ், 1 கப்

காலி பிளவர் - 1 கப்

தேங்காய் - அரை மூடி

கடுகு - சிறிதளவு

உளுத்தம் பருப்பு - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

வேர்க்கடலை - 2 தேக்கரண்டி

எள் - 2 தேக்கரண்டி

பச்சரிசி - 2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு - 10

வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்

முதலில் சூடான கடாயில் வேர்க்கடலை, எள், பச்சரிசி ஆகிய பொருட்களை கடாயில் வறுக்க வேண்டும். பின்னர் இந்த பொருட்களை ஆற வைத்து பொடித்துக்கொள்ள வேண்டும்.

அவல் செய்முறை:

அவலை 10 நிமிடம் தண்ணீரில் நன்றாக அலசி, வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம் போட்டு தாளிக்கவும். முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். மேலும் அதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறி கலவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும். இதையடுத்து அதில் தேவையான உப்பை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் ஊற வைத்து வடித்த அவல், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி, கடைசியாக நாம் ஏற்கனவே வறுத்து பொடித்த வேர்க்கடலை, எள், பச்சரிசி பொடியை தூவி கலந்து இறக்கி வைக்கவும். இப்போது தயாராகிவிட்டது வெஜிடபிள் அவல்..!

நவராத்திரியில் விரதத்தில் இருப்பவர்களுக்கு இந்த வெஜிடபிள் அவல் ஆரோக்கியமானதாக இருக்கும். இது நவராத்திரி நைவேத்தியத்திற்கு மட்டுமல்ல.. சாதாரண நாட்களில் பள்ளி முடிந்து விட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கூட அடிக்கடி செய்து தரலாம். இதில் உள்ள காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை தரும்.

குறிப்பு : அம்மனுக்கு படைக்கும் போது வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை மட்டும் தவிர்கலாம். அதேபோல் பச்சை பட்டாணி உள்ளிட்ட விரும்பிய காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி