தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paneer Curry: தாபா ஸ்டைல் முந்திரி பன்னீர் கறி; ரொட்டி, நாண், பூரி, சப்பாத்தி, ஃபுல்கா, குல்சா என அனைத்துக்கும் ஏற்றது!

Paneer curry: தாபா ஸ்டைல் முந்திரி பன்னீர் கறி; ரொட்டி, நாண், பூரி, சப்பாத்தி, ஃபுல்கா, குல்சா என அனைத்துக்கும் ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Apr 08, 2024 04:05 PM IST

Dhaba Style Paneer Curry : தாபா ஸ்டைலில் செய்யப்படும் கறிகள் அனைத்தும் தனித்தன்மையான சுவை கொண்டவை.

Paneer curry: தாபா ஸ்டைல் முந்திரி பன்னீர் கறி; ரொட்டி, நாண், பூரி, சப்பாத்தி, ஃபுல்கா, குல்சா என அனைத்துக்கும் ஏற்றது!
Paneer curry: தாபா ஸ்டைல் முந்திரி பன்னீர் கறி; ரொட்டி, நாண், பூரி, சப்பாத்தி, ஃபுல்கா, குல்சா என அனைத்துக்கும் ஏற்றது!

ட்ரெண்டிங் செய்திகள்

குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

பன்னீர் – 400 கிராம்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 4

ஏலக்காய் – 1

பிரியாணி இலை – 1

மிளகு – ஒரு ஸ்பூன்

ஷாஹி ஜீரா – சிறிது

சீரகம் – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 3 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)

இஞ்சி - பூண்டு விழுது – 2 ஸ்பூன்

தக்காளி விழுது – 4 பழம்

உப்பு – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய் தூள் – 3 ஸ்பூன்

மல்லித்தூள் – 2 ஸ்பூன்

சீரகத் தூள் – ஒன்றரை ஸ்பூன்

சர்க்கரை – அரை ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடியளவு

செய்முறை -

ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து அவற்றை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதே கடாயில் குடைமிளகாய் சேர்த்து சிறிது வறுக்கவேண்டும்.

மீண்டும் அதே கடாயில் நெய் சேர்த்து சமமாக வெட்டிய பன்னீரை சேர்க்கவேண்டும். அனைத்து பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரும் வரை வறுக்கவேண்டும். பன்னீரை வறுக்க சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் ஆகும். அவற்றை ஒதுக்கி வைக்கவேண்டும்.

25 முந்திரி பருப்பை தண்ணீரில் குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் நன்றாக விழுதாக அரைக்கவேண்டும். அவற்றை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

அகலமான கடாயில் நெய் எடுக்கவேண்டும். அதில் எண்ணெய் சேர்க்கவேண்டும்.

பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு, ஷாஹி ஜீரா, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சில நொடிகள் வதக்கி, பின்னர் நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

பிறகு அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். பச்சை வாசம் போகவேண்டும். பின்னர் தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர், உப்பு, மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சர்க்கரை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும்.

முந்திரி விழுதைச் சேர்த்து, கலந்து, பின்னர் தண்ணீர் சேர்க்கவேண்டும்.

பின்னர் வறுத்த குடைமிளகாய், முந்திரி மற்றும் பன்னீரை சேர்க்கவேண்டும். எல்லாவற்றையும் நன்றாக கலந்துவிடவேண்டும்.

கடாயை ஒரு மூடியால் மூடி, கறியை சுமார் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவேண்டும். சில நிமிடங்கள் கழித்து கரம் மசாலா தூள், நசுக்கிய கசூரி மேத்தி சேர்த்து கலக்கவேண்டும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைக் கொண்டு கறியை அலங்கரிக்கவும்.

சுவையான தபா ஸ்டைல் பன்னீர் கறி தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தாபா ஸ்டைலில் செய்யப்படும் கறிகள் அனைத்தும் தனித்தன்மையான சுவை கொண்டவை.

இதில் முந்திரி மற்றும் பன்னீர் சேர்க்கப்படுவதால், இது சுவை நிறைந்ததாக இருக்கும். இதற்கு மற்ற பொருட்கள் அனைத்தும் நமது வீட்டில் உள்ளவையே போதுமானது. இதை அனைத்து வகை பிரியாணி, ரொட்டிகள், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அனைத்துக்கும் தொட்டுக்கெள்ள நன்றாக இருக்கும்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

WhatsApp channel

டாபிக்ஸ்