ஹீமோகுளோபின் அதிகரிப்பது முதல் எண்ணற்ற நன்மைகள்; இது செம்ம மேட்டர் – மருத்துவர் கூறுவது என்ன?
Dec 21, 2024, 01:03 PM IST
உடலில் ஹீமோகுளோபினை அதிகரிப்பது முதல் எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது இந்த பானம். அது என்னவென்று பாருங்கள்.
ரத்த சோகையைத் தடுக்கவேண்டும். அல்சரை அடித்து விரட்ட வேண்டும். மலச்சிக்கலைப்போக்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். தோல் நோய்கள் வரக்கூடாது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படக்கூடாது. சருமம் பளபளப்புடன் பொலிவாக இருக்கவேண்டும். பார்வைத்திறன் கூராக வேண்டும். கை-கால்-மூட்டுகளில் வலிகள் ஏற்படாமல் இருக்கவேண்டும். இத்தனையையும் செய்ய நாம் எத்தனை மாத்திரைகளை சாப்பிடவேண்டும் அல்லது கடும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்ய வேண்டுமா என நீங்கள் குழம்ப வேண்டாம். வீட்டில் உள்ள கிச்சனுக்கு சென்றாலே போதும்.
உங்களின் உடலில் இத்தனை பிரச்னைகளுக்கு தீர்வு உங்கள் வீட்டு சமையலறையிலேயே உள்ளது என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர் காமராஜ் கூறுகிறார். அதற்கு நீங்கள் தினமும் கட்டாயம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தவறாமல் செய்யவேண்டும். அதைச்செய்தால் உங்களுக்கு இத்தனை பலன்கள் கிடைக்கும் என்று மருத்துவர் கூறுகிறார். அதை தனது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டுள்ளார். அது என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 1 (விதைகளை நீக்கிவிடவேண்டும்)
மாதுளை – ஒரு கப்
இஞ்சி – கால் இன்ச்
கேரட் – 1 (சிறியது)
பீட்ரூட் – 1 (சிறியது)
கறிவேப்பிலை – 3 கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
தேன் – 2 ஸ்பூன்
தேவையான பொருட்கள்
விதைகளை நீக்கிய பெரிய நெல்லிக்காய், மாதுளை, கேரட், பீட்ரூட், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா என அனைத்தையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
இதில் தேன் கலந்து காலை அல்லது மாலை என இருவேளைகளில் ஏதேனும் ஒருமுறை 200 மில்லி லிட்டர் அளவு பருகவேண்டும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு இது இத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வைத்தரும். மேலும் இந்த பானத்தை சர்க்கரை நோயாளிகள் கூட பருகலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
எனவே இதை கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுங்கள் என்று சித்த மருத்துவர் காமராஜ் அறிவுறுத்துகிறார். இது உங்களுக்கு ரத்த சோகையைத் தடுக்கம். அல்சரை அடித்து விரட்டும். மலச்சிகலைப்போக்கும். உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். சரும நோய்களை விரட்டி, சருமத்தை பாதுகாக்கும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் காத்து, சருமத்துக்கு பொலிவைத் தரும்.
பார்வைத்திறன் கூராகும். கை-கால்-மூட்டுகளில் வலிகள் ஏற்படாமல் இருக்கும். உடலில் இந்த பிரச்னைகள் இல்லாவிட்டால் நீங்கள் அடிக்கடி மருத்துவரை சந்திக்கவேண்டிய நிலை கூட ஏற்படாது. எனவே வீட்டிலே ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்