அரைத்து விட்ட சாம்பார்; மணம் ஊரையே கூட்டும்; டிஃபனுக்கு வைத்து சாப்பிட ஏற்றது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அரைத்து விட்ட சாம்பார்; மணம் ஊரையே கூட்டும்; டிஃபனுக்கு வைத்து சாப்பிட ஏற்றது!

அரைத்து விட்ட சாம்பார்; மணம் ஊரையே கூட்டும்; டிஃபனுக்கு வைத்து சாப்பிட ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Nov 22, 2024 02:48 PM IST

அரைத்துவிட்ட சாம்பார் செய்வது எப்படி என்று பாருங்கள். டிஃபனுக்கு ஏற்றது.

அரைத்து விட்ட சாம்பார்; மணம் ஊரையே கூட்டும்; டிஃபனுக்கு வைத்து சாப்பிட ஏற்றது!
அரைத்து விட்ட சாம்பார்; மணம் ஊரையே கூட்டும்; டிஃபனுக்கு வைத்து சாப்பிட ஏற்றது!

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 100 கிராம்

கடலை பருப்பு – 25 கிராம்

வர மல்லி – 20 கிராம்

வர மிளகாய் – 20 கிராம்

கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

முருங்கைக்காய் – 1 (பொடியாக நறுக்கியது)

பரங்கிக்காய் – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

சின்ன வெங்காயம் – 12

துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 3

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

நெய் – 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் – 60 மில்லி லிட்டர்

மிளகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

செய்முறை

துவரம் பருப்பை குக்கரில் வைத்து வேகவைத்து எடுத்து தனியாக எடுத்துக்கொள்ளவேணடும். எப்போது வேகவைத்தாலும் அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிய கட்டி பெருங்காயம், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து வேகவிடவேண்டும். அப்போதுதான் பருப்பு ஏற்படுத்தும் வயிறு உபாதைகளில் இருந்து விடுபட முடியும்.

மசாலா தயாரிப்பு

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், மிளகு, கடலை பருப்பு, வரமிளகாய், வர மல்லி சேர்த்து சிவக்க வறுக்கவேண்டும். அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காய் துருவலை கடாயில் சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். தேங்காய் சேர்க்கும்போது அடுப்பு எரியக்கூடாது.

தேங்காயும் நன்றாக கலந்தவுடன் கடைசியாக சீரகத்தையும், இதே சூட்டில் சேர்த்து பிரட்டி இறக்கி வைக்கவேண்டும். இதை நன்றாக ஆறவிட்டு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

சாம்பார் வைக்க

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, உளுந்து, கநிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து தக்காளி, வெட்டிவைத்துள்ள முருங்கைக்காய், கேரட், பரங்கிக்காய் என அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவேண்டும்.

காய்கறிகள் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள விழுதை அதில் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் இறக்கி, மல்லித்தழை மற்றும் நெய் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பரிமாறும்போது திறந்தால் இந்த சாம்பாரின் மண்ம் ஊறையே கூட்டும்.

இந்த அரைத்து விட்ட சாம்பார் இட்லி, சாம்பார் இட்லி, தோசை, கிச்சடி, வெண் பொங்கல், உப்புமா, என அனைத்திற்கும் ஏற்றது! சாம்பார் வடைக்கு மிகவும் பிரமாதமான சாம்பார். வடைக்கு மட்டும் இதைச் செய்தால் சாம்பாரை மிகவும் கெட்டியாக வைக்கத் தேவையில்லை.

இந்த சாம்பார் கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். மிக்ஸியில் அரைக்காமல் மசாலாவை அம்மியில் கையால் அரைத்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும். முக்கியமான விஷயம் இந்த சாம்பாரை சோற்றில் ஊற்றிச் சாப்பிட நன்றாகவே இருக்காது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.