உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறதா? வாழ்த்துக்கள். ஆனால் அதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

By Priyadarshini R
Dec 21, 2024

Hindustan Times
Tamil

ஒவ்வொரு குழந்தையும் வித்யாசமானவர். உங்கள் நண்பரின் குழந்தைக்கு சரியானது உங்கள் குழந்தைக்கு சரியாகாது.

உறக்க குறைபாடு, பகிரப்பட்ட பொறுப்புகள், தங்களுக்கான நேரக் குறைபாடு என பல விதமான டென்சனை குழந்தை பிறப்பு கொண்டுவருகிறது.

பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், தாய்ப்பால் கொடுப்பது எளிதான ஒன்று என்று. ஆனால், அது எப்போது உண்மை கிடையாது. 

உறக்கம் மட்டுமல்ல, உறங்கும்போது இடையூறு, நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத நேரத்தில் உறக்கம் என அது உங்களை முற்றிலும் வெறுமை நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

குழந்தைகள் இருப்பதற்கு முன்னர் இருந்த வீடாக உங்கள் வீடு இப்போது இருக்காது. உங்கள் வீட்டை அது விளையாட்டு சாமான்கள் நிறைந்ததாக மாற்றும்.

மற்றவர் குழந்தைகளைப்போல் சரியான காலத்தில் பேசுவது அல்லது நடப்பது போன்றவற்றை உங்கள் குழந்தை செய்யாவிட்டால் அது உங்களுக்கு கடும் மன உளைச்சலைத்தரும். 

உங்களை நீங்கள் இழந்துவிட்டதாக நீங்கள் உணர்வீர்கள். உங்களின் புதிய பலங்கள், ஆர்வங்கள் மற்றும் கோணங்களை நீங்கள் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இந்த பேரன்டிங் காலம் இருக்கும்.

Vastu Tips:  வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?

Pic Credit: Shutterstock